தமிழ்நாடு

tamil nadu

ஆய்வு மாணவருக்கு கரோனா தொற்று: காமராஜர் பல்கலை. துறை மூடல்!

By

Published : Apr 10, 2021, 4:15 AM IST

மதுரை காமராஜர் பல்கலை., உயிரி தொழில்நுட்பத் துறையில் பயிலும் மாணவர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, அந்தத் துறையை மூட பல்கலை., துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலை
மதுரை காமராஜர் பல்கலை

மதுரை:மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் உயிரி தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர் ஒருவருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதற்கான மருத்துவ சிகிச்சையின் போது அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் மாணவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்த ஆய்வு மாணவர் கரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிரி தொழில்நுட்பத் துறையில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் துறை மூடப்பட்டது.

அந்தத் துறையில் பணியாற்றும் பேராசிரியர்கள், மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறும்போது, "ஆய்வு மாணவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உயிரி தொழில்நுட்பத் துறை மூடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் கரோனா தொற்று பாதிப்பை தவிர்க்கும் வகையில் தடுப்பூசி போடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க:அம்பேத்கர் சட்ட பல்கலை துணை வேந்தராக சந்தோஷ் குமார் நியமனம்

ABOUT THE AUTHOR

...view details