தமிழ்நாடு

tamil nadu

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை - புதிதாகப்பொறுப்பேற்ற மதுரை ஆட்சியர்!

By

Published : May 19, 2021, 8:46 PM IST

கரோனா தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளை முதற்கட்டமாக தீவிரப்படுத்தப்படும். ஆக்ஸிஜன் தடையின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்ற டாக்டர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

புதிய ஆட்சியர் டாக்டர் அனிஷ் சேகர்
புதிய ஆட்சியர் டாக்டர் அனிஷ் சேகர்

மதுரை: மதுரை மாவட்டத்தின் 216ஆவது ஆட்சியராக டாக்டர். அனிஷ் சேகர் இன்று(மே19) பொறுப்பேற்றுக் கொண்டார். மருத்துவரான இவர் கடந்த 2011ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர். கடந்த 2019ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சியின் ஆணையராக, இவர் பணிபுரிந்துள்ளார்.

புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அனிஷ் சேகர், "ஏற்கெனவே மதுரை மாநகராட்சி ஆணையராகப் பணிபுரிந்துள்ளதால் மதுரை மக்களின் தேவை அறிந்து அதனை நிறைவேற்றுவேன். மதுரையில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவேன். கரோனா தொற்றால் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளை ஆராய்ந்து மக்களின் அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரெம்டெசிவிர் மருந்து தனியார் மருத்துவமனைகளில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதைப் பின்பற்றுகிறோம்.

ஆக்ஸிஜன் தான் தற்போதையை கரோனா பாதிப்பின் மருந்து என்பதால் அதனை உரிய முறையில் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். ஆக்சிஜன் உடனுக்குடன் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒடிசா உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆக்ஸிஜன் கொண்டு வரப்படுகிறது.

தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

பொதுமக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதைத் தவிர்த்தால் மட்டுமே கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். பொதுமக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது, முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவது தொடர்பாக பொதுமக்களுக்குத் தொடர்ந்து அறிவுறுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details