தமிழ்நாடு

tamil nadu

மேலவளவு படுகொலை - 13 பேரின் முன் விடுதலையை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி!

By

Published : Feb 3, 2023, 2:33 PM IST

மதுரை மேலவளவு படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேரின் முன் விடுதலையை ரத்து செய்ய கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

mdu
mdu

மதுரை:மதுரை மாவட்டத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு பட்டியலினத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசன் உட்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ராமர், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன் உள்ளிட்ட 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

இதில் மூன்று பேர் அண்ணா பிறந்தநாளில் நன்னடத்தைக் காரணமாக முன்விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பொது மன்னிப்பு அடிப்படையில் மீதமிருந்த 13 பேரும் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்களின் விடுதலையை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல் கொலை செய்யப்பட்டவர்களின் மனைவி மற்றும் தாய் தரப்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு, அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது.

இந்த நிலையில், 13 பேரின் விடுதலையை எதிர்த்த வழக்குகளில் இன்று(பிப்.2) உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கியது. இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பு சூழலையும் பரிசீலனை செய்த பிறகே, தமிழக அரசு 13 பேரின் முன் கூட்டிய விடுதலை குறித்த அரசாணையை பிறப்பித்துள்ளது. எனவே, இதில் தலையிட விரும்ப வில்லை என்று கூறிய நீதிபதிகள் வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: Anna death anniversary: "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" - வீரநடை போட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details