தமிழ்நாடு

tamil nadu

மதுரை கோயில்களின் உண்டியலில் ரூ.87 லட்சம் காணிக்கை...!

By

Published : Aug 28, 2019, 4:57 AM IST

மதுரை: மதுரையில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் உள்ள உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது.

madurai-meenakshi-amman-temple-hundy-count

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், தெப்பக்குளம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், செல்லூர் அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில், திருவாதவூர் அருள்மிகு திருமறைநாதர் சுவாமி திருக்கோயில் மற்றும் மதுரை மாவட்டத்திலுள்ள உப கோயில்களின் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது.

இதில், 87 லட்சத்து 50 ஆயிரத்து 951 ரூபாய் ரொக்கம், 461 கிராம் தங்கம், 1 கிலோ 920 கிராம் வெள்ளி மற்றும் அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 579 இருந்தன. அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணை ஆணையரும் மற்றும் செயல் அலுவலருமான நடராஜன் முன்னிலையில் உண்டியல் தொகை எண்ணும் பணி நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

உதவி ஆணையர் மு.விஜயன், உதவி ஆணையர் ஜெ.முல்லை மற்றும் கண்காணிப்பாளர்கள், மதுரை தெற்கு, வடக்கு ஆய்வர்கள், பக்தர் பேரவையினர், ஐயப்ப சேவா சங்கத்தினர், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற எஸ்பிஐ வங்கி அலுவலர்கள் என சுமார் 315 பேர் உண்டியல் எண்ணும் பணியில் கலந்து கொண்டனர்.

Intro:மதுரை மீனாட்சி கோவில் உண்டியலில் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் டாலர்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதற்கு சொந்தமான கோவில்களின் உண்டியல் வருவாயை அலுவலர்கள் எண்ணியபோது அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பணத்தாள்களும் எண்ணப்பட்டன.
Body:மதுரை மீனாட்சி கோவில் உண்டியலில் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் டாலர்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதற்கு சொந்தமான கோவில்களின் உண்டியல் வருவாயை அலுவலர்கள் எண்ணியபோது அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பணத்தாள்களும் எண்ணப்பட்டன.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், தெப்பக்குளம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், செல்லூர் அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில், திருவாதவூர் அருள்மிகு திருமறைநாதர் சுவாமி திருக்கோயில் மற்றும் மதுரை மாவட்டத்திலுள்ள உப கோயில்களின் உண்டியல் திறப்புப் பணி இன்று நடைபெற்றது.

இந்தப் பணியின்போது, 87 லட்சத்து 50 ஆயிரத்து 951 ரூபாயும், பல மாற்று தங்க வகைகள் 461 கிராம், பல மாற்று வெள்ளி வகைகள் 1 கிலோ 920 கிராம் மற்றும் அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 579 எண்ணிக்கையில் எண்ணப்பட்டுள்ளது.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணை ஆணையரும் மற்றும் செயல் அலுவலருமான நா.நடராஜன் முன்னிலையில் உண்டியல் தொகை எண்ணும் பணி நடைபெற்றது. உதவி ஆணையர் மு.விஜயன், உதவி ஆணையர் ஜெ.முல்லை மற்றும் கண்காணிப்பாளர்கள், மதுரை தெற்கு, வடக்கு ஆய்வர்கள், பக்தர் பேரவையினர், ஐயப்ப சேவா சங்கத்தினர், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் ஒய்வுபெற்ற எஸ்பிஐ வங்கி அலுவலர்கள் என சுமார் 315 பேர் உண்டியல் எண்ணும் பணியில் கலந்து கொண்டனர்.
Conclusion:

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details