தமிழ்நாடு

tamil nadu

காதலிக்க மறுத்த மாணவியை கொடூரமாக கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை..

By

Published : Jun 9, 2022, 10:17 AM IST

மதுரை அருகே காதலிக்க மறுத்த நர்சிங் மாணவியை கொடூரமாக கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காதலிக்க மறுத்த நர்சிங் மாணவியை கொடூரமாக கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை..
காதலிக்க மறுத்த நர்சிங் மாணவியை கொடூரமாக கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ரேவதி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்று வந்த நிலையில் இவருடைய உறவுக்கார பையன் ஈஸ்வரன் என்பவர் ரேவதியை நீண்ட நாட்களாக ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ரேவதி வீட்டில் இருந்தபோது ஈஸ்வரன் தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தி வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனையடுத்து, இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவி ரேவதியை சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாகக் குத்தி கொலை செய்துவிட்டு ஈஸ்வரன் தப்பியோடினார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த உசிலம்பட்டி காவல்துறையினர் ஈஸ்வரனை கைது செய்தனர்.

அதன் பின், மாணவி ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கு மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஈஸ்வரனுக்கு ஆயுள் தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி கிருபாகரன் முத்துராமன் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து ஈஸ்வரன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: Pocso act: வீட்டு உரிமையாளரின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - போலீஸ் வலைவீச்சு

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details