தமிழ்நாடு

tamil nadu

செந்தில் பாலாஜி வீட்டு ரெய்டின் போது தாக்குதல்.. வருமான வரித்துறை மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவு. உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 2:35 PM IST

karur IT official hit case: கரூரில் ஐடி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் மேலும் 4 பேரின் ஜாமீன் மனுவை ரத்து செய்யக்கோரி வருமான வரித்துறை செய்த மனுதாக்கல் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் உறவினர் வீடுகளில் கடந்த மே மாதம் 25ம் தேதி வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது வருமான வரி அதிகாரிகளை தாக்கி வாரண்ட் நகல், அரசு முத்திரைகள், வழக்கு தொடர்பான அரசு ஆவணங்கள், பென்டிரைவ் ஆகியவற்றை பறித்துச் சென்று, பென்டிரைவில் இருந்த தகவல்கள் அழிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஆவணங்களை பறித்து சென்றதாக திமுகவினர் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து திமுகவினர் பலரை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் 15 திமுகவினர் கரூர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர்.

இந்நிலையில் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வருமானத்துறை சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வருமான வரித்துறையின் உதவி இயக்குநர் யோக பிரியங்கா, கிருஷ்ணகாந்த், மற்றும் ஆய்வாளர்கள் ஸ்ரீனிவாசராவ் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இதையும் படிங்க:"கோரிக்கை வைத்தால் காவிரி பிரச்சினை தீர்ந்துவிடாது.. பாரத் பெயர் மாற்றம் - மோடி அவசரப்படுகிறார்" - திருநாவுக்கரசர் எம்.பி!

இந்நிலையில் இந்த வழக்கில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பால்ராஜ், லாரன்ஸ், விக்னேஷ், சதீஷ்குமார், கனகராஜ், கிருஷ்ணன், செல்வம் ரூபேஸ், அருண், ஜோதிபாசு, பூபதி குணசேகரன், தங்கவேல், பாலசுப்பிரமணியன், அய்யனார் ஆகியோரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் ரீகன், ராஜா, சரவணன், ராமச்சந்திரன் உள்ளிட்ட நான்கு பேருக்கு கரூர் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. இதை எதிர்த்து வருமான வரித்துறையினர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த மனு இன்று (செப் 11) விசாரணைக்கு வந்தது. ஜாமின் பெற்ற நான்கு பேர் மற்றும் காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:"கோரிக்கை வைத்தால் காவிரி பிரச்சினை தீர்ந்துவிடாது.. பாரத் பெயர் மாற்றம் - மோடி அவசரப்படுகிறார்" - திருநாவுக்கரசர் எம்.பி!

ABOUT THE AUTHOR

...view details