தமிழ்நாடு

tamil nadu

திருநெல்வேலி மாவட்ட CEO, DEO-க்களுக்கு பிடிவாரண்ட் - நீதிமன்றம் அதிரடி!

By

Published : Jan 7, 2023, 8:12 PM IST

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு ஜாமினுடன் கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

மதுரை:தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிராங்க்லின் ராஜ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "பாளையங்கோட்டை பகுதியிலுள்ள சேவியர் மேல்நிலைப் பள்ளியில் கிரேடு 2 ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். நான் B.T. அசிஸ்டன்ட் பதவி உயர்வுக்குத் தகுதி பெற்றிருந்தும் எனக்குப் பதவி உயர்வு அளிக்கவில்லை.

இது தொடர்பாக 2020ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்து எட்டு வாரத்திற்குள் எனது மனுவைப் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால், தற்போது வரை எனது பதவி உயர்வுக்கான மனுவை அதிகாரிகள் பரிசீலனை செய்யவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. இதனையடுத்து நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை முறையாகப் பின்பற்றாத திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு ஜாமீனுடன் கூடிய பிடிவாரண்டைப் பிறப்பித்தார்.

மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஜனவரி 20ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த திருநெல்வேலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கொலை வழக்கில் பொய் சாட்சி; சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details