தமிழ்நாடு

tamil nadu

மதுரை வழியாக கோவா செல்லும் சிறப்பு சுற்றுலா ரயில்.. எங்கெங்கு போகலாம் தெரியுமா..?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2023, 8:47 PM IST

Updated : Nov 13, 2023, 9:11 PM IST

Special train to Goa: டிசம்பர் மாதம் திருவனந்தபுரம் அடுத்த கொச்சுவேலியில் இருந்து மதுரை வழியாக உடுப்பி, மூகாம்பிகை, சிருங்கேரி, கோவா ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படும் என ஐ.ஆர்.சி.டிசி அறிவித்துள்ளது.

Special train to goa via madurai
மதுரை வழியாக கோவா செல்லலும் சிறப்பு சுற்றுலா ரயில்

மதுரை: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த கொச்சுவேலியில் இருந்து மதுரை வழியாக உடுப்பி, முகாம்பிகை, சிருங்கேரி, கோவா ஆகிய நகரங்களை இணைக்கும் சுற்றுலா ரயில் சேவையை, டிசம்பர் மாதத்தில் இயக்க இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி அந்த ஆன்மீக சுற்றுலா ரயில், டிசம்பர் 7ஆம் தேதி அன்று அதிகாலை 12.30 மணிக்குத் திருவனந்தபுரம் அடுத்த கொச்சுவேலி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு கொல்லம், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை (புறப்பாடு காலை 07.30 மணி), திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், சென்னை, காட்பாடி, சேலம், ஈரோடு, போத்தனூர், பாலக்காடு வழியாக, டிசம்பர் 8ஆம் இரவு 07.30 மணிக்குக் கோவா அடுத்த மட்கான் ரயில் நிலையம் சென்று சேரும்.

பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் உடுப்பி, மூகாம்பிகை கோயில், முருதேஷ்வர் கோயில், சிருங்கேரி சாரதா கோயில், ஹரநாடு அன்னபுரேஷ்வரர் கோயில் ஆகிய கோயில்களில் பயணிகள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், அங்கிருந்து கோவாவில் உள்ள சுற்றுலாத் தலங்களையும் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் அறிவித்துள்ளது.

பின்பு அந்த சிறப்புச் சுற்றுலா ரயில், கோவா அடுத்த மட்கான் ரயில் நிலையத்திலிருந்து, டிசம்பர் 10ஆம் தேதி இரவு 07.00 மணிக்குப் புறப்பட்டு டிசம்பர் 12ஆம் தேதி காலை 07.35 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்து சேரும். அதன் பின்னர் மதுரையிலிருந்து காலை 07.40 மணிக்குப் புறப்பட்டு, மாலை 03.30 மணிக்குத் திருவனந்தபுரம் அடுத்த கொச்சுவேலி ரயில் நிலையம் சென்று சேரும்.

மேலும், இந்த சுற்றுலா ரயிலுக்கு மதுரை பகுதி சுற்றுலாப் பயணிகள் பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்ய 8287931977, 8287932122 ஆகிய அலைப்பேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு முன்பதிவு செயலாம் என்றும், மேலும் www.irctctourism.com என்கிற இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:நாகை முதல் சென்னை வரை கனமழைக்கு வாய்ப்பு.. வெதர்மேன் கொடுத்த அலர்ட்..!

Last Updated : Nov 13, 2023, 9:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details