தமிழ்நாடு

tamil nadu

நுகர்வோர் நீதிமன்ற பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு

By

Published : Aug 3, 2021, 6:48 PM IST

தமிழ்நாட்டில் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கை மதுரை உயர் நீதிமன்ற கிளை இன்று ஒத்திவைத்தது.

நுகர்வோர் நீதிமன்ற பணியிடங்கள் நிரப்பக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு
நுகர்வோர் நீதிமன்ற பணியிடங்கள் நிரப்பக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மதுரை:மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன். இவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், நுகர்வோர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரி மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு முழுவதும் 32 நுகர்வோர் நீதிமன்றங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில், ஒரு தலைவர், 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தலைவர், உறுப்பினர்கள் இல்லாததால் பெரும்பாலான நாட்களில் நீதிமன்றங்கள் செயல்படுவதில்லை. வேறு மாவட்டத்தில் பணியாற்றும் நுகர்வோர் நீதிமன்ற தலைவர், உறுப்பினர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் வந்து வழக்குகளை விசாரித்து ஒத்திவைத்து விட்டுச் செல்கின்றனர்.

இதனால் ஒவ்வொரு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திலும், ஏராளமான வழக்குகள் தீர்வுகாணப்படாமல் நிலுவையில் உள்ளன. எனவே, காலியாக உள்ள நுகர்வோர் நீதிமன்ற பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ஆனந்தி அமர்வு முன்பு இன்று (ஆக.3) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பான வழக்கு ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் இருப்பதாகக் கூறி, வழக்கை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:திறந்தநிலைப் பல்கலைக் கழகப் பட்டப்படிப்பு அரசுப்பணிக்கு செல்லுபடியாகும் - துணைவேந்தர் பார்த்தசாரதி

ABOUT THE AUTHOR

...view details