தமிழ்நாடு

tamil nadu

குழந்தைகள் தினத்தன்று தான் சந்திரயான் 1 விண்கலத்தில் ஏவப்பட்டது - மயில்சாமி அண்ணாதுரை

By

Published : Nov 15, 2022, 7:42 AM IST

நவம்பர் 14 குழந்தைகள் தின விழா மட்டுமல்ல, இதே நாளில்தான் கடந்த 2008ஆம் ஆண்டு சந்திரயான் 1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது என இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் தினத்தன்று தான் சந்திரயான் 1 விண்கலத்தில் ஏவப்பட்டது
குழந்தைகள் தினத்தன்று தான் சந்திரயான் 1 விண்கலத்தில் ஏவப்பட்டது

மதுரை: கோச்சாடையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார். பிறகு, மாணவர்களிடயே பேசினார். அப்போது "பள்ளிப்படிப்பை முடித்து விட்டாலும், கல்லூரி படிப்பை முடித்து விட்டாலும் கற்றுக் கொள்வதை நிறுத்தக்கூடாது. ஒவ்வொன்றையும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். வாய்ப்புகள் நிறைய கொட்டி கிடக்கின்றன.

ஒரு காலத்தில் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் 5 அல்லது 6 கிலோமீட்டர் பயணம் செய்து பயில வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது உங்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

குழந்தைகள் தினத்தன்று தான் சந்திரயான் 1 விண்கலத்தில் ஏவப்பட்டது

நிறைய வாய்ப்புகள் உள்ளதைப்போல போட்டிகளும் நிறைய உள்ளன. வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதால் தான் தொழில்நுட்பத்தில் சாதிக்க முடிந்தது. வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் கற்றுக் கொண்டே இருப்பவர்களுக்கு, அவர்களுக்கான உயரம், பணி காத்துக்கொண்டே இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஏங்க வேண்டாம். மனிதர்களாக நாம் பிறந்ததே மிகப்பெரிய வாய்ப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'இந்தியா விண்வெளித் துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. வாழ்நாள் முழுவதும் கற்றல் என்பது முக்கியமான ஒன்று. கற்றலின் பரிணாமத்தை புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் நம் குழந்தைகள் சாதிப்பதற்கு தேவையான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

நவம்பர் 14 குழந்தைகள் தின விழா மட்டுமல்ல, இதே நாளில்தான் கடந்த 2008ஆம் ஆண்டு சந்திரயான் 1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது குலசேகரன் பட்டினத்தில் ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் ஆரம்பக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

கரோனா மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படுத்தியது. ஆனால் அதைத் தாண்டி வந்திருக்கிறோம் என்றால் தொழில்நுட்ப வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி தான். விண்வெளித் துறைக்கு எப்படி பொறியாளர்கள் தேவைப்படுகிறார்களோ அதுபோலவே விவசாயத்திற்கும் பொறியாளர்கள் தேவை. அப்போதுதான் புதிய தொழில் நுட்பங்களை கையாள முடியும்" என்றார்.

இதையும் படிங்க: கிடா விருந்தில் தகராறு - திடீர் துப்பாக்கி சூட்டால் பரபரப்பு..

ABOUT THE AUTHOR

...view details