தமிழ்நாடு

tamil nadu

பட்டப்பகலில் பெண்ணிடம் 5 சவரன் நகை பறிப்பு - போலீஸ் விசாரணை!

By

Published : Aug 20, 2019, 7:17 AM IST

மதுரை: பெண்ணிடம் ஐந்து சவரன் நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களின் சிசிடிவி புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.

சிசிடிவி புகைப்படங்கள்

மதுரை மாவட்டம், கோச்சடை பகுதியைச் சேர்ந்தவர் கலைவதி. இவர் தனது கணவருடன் புதூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு மிண்டும் புதூர் ஐயப்பன் கோயில் வழியாகச் செல்லும் போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கலைவதி அணிந்திருந்த ஐந்து சவரன் நகையை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளனர்.

நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள்

இது குறித்து தகவலறிந்து வந்த புதூர் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை அய்வு செய்தனர். அதில் சிசிடிவியில் பதிவான அந்த இளைஞர்களின் புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தப்பியோடிபோது
Intro:பட்டப்பகலில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகை பறிப்பு - இக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் சிசிடிவி புகைப்படங்கள் வெளியீடு

மதுரையில் பட்டப்பகலில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இருந்த 5 சவரன் நகையை பறித்துச் சென்ற இளைஞர்கள் சிசிடிவி காட்சிகளின் புகைப்படம் வெளியீடுBody:பட்டப்பகலில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகை பறிப்பு - இக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் சிசிடிவி புகைப்படங்கள் வெளியீடு

மதுரையில் பட்டப்பகலில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இருந்த 5 சவரன் நகையை பறித்துச் சென்ற இளைஞர்கள் சிசிடிவி காட்சிகளின் புகைப்படம் வெளியீடு

மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த கலைவதி தன் கணவருடன் புதூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு மிண்டும் புதூர் வழியாக போகும் வழியில் புதூர் ஐயப்பன் கோவில் அருகே பின்தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் கலைவதி அணிந்திருந்த 5 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்,

இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து விரட்டி சென்று பிடிக்க முயற்சி செய்தபோது வேகமாக சென்றுள்ளனர்,

தகவலறிந்து சம்பவ இடத்தில் இருந்த புதூர் காவல்துறையினர் அந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு இரண்டு இளைஞர்களை தேடி வருகின்றனர்.

தற்போது சிசிடிவி கேமராக்களில் பதிவான அந்த இளைஞர்களின் புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டு உள்ளனர்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details