தமிழ்நாடு

tamil nadu

நகை வாங்குவதுபோல் நடித்து 10 சவரன் நகைகள் திருட்டு: CCTV-யினை வைத்து போலீஸ் விசாரணை

By

Published : Jun 5, 2022, 4:42 PM IST

மதுரையில் உள்ள நகைக்கடை ஒன்றில் நகை வாங்குவது போல் நடித்து 10 சவரன் சங்கிலியைத் திருடிய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை வாங்குவது போல் நடித்து 10 சவரன் நகை திருட்டு
நகை வாங்குவது போல் நடித்து 10 சவரன் நகை திருட்டு

மதுரையில் தெற்கு ஆவணி மூல வீதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று அங்குள்ள கடை ஒன்றில் ஹிஜாப் அணிந்து வந்த பெண் ஒருவர் நகை வாங்குவது போல் நடித்து கடையின் உரிமையாளர் அசந்த நேரத்தில் 10 சவரன் தங்கச்சங்கிலியை திருடி தப்பி ஓடியுள்ளார்.

திடீரென அந்தப் பெண் நகை வாங்காமல் சென்றதால் குழப்பம் அடைந்த கடையின் உரிமையாளர் நகைகளை சரிபார்த்த போது 10 சவரன் சங்கிலி திருடு போனது தெரியவந்தது. உடனே இந்தத் திருட்டுச்சம்பவம் குறித்து கடை உரிமையாளர் விளக்குத்தூண் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கடையில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள வைத்து நகையினை திருடிய நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த நிலையில் ஹிஜாப் அணிந்த பெண் நகையைத் திருடி தப்பி ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நகை வாங்குவது போல் நடித்து 10 சவரன் நகை திருட்டு

இதையும் படிங்க:திண்டுக்கல்லில் ஒரே நாளில் 3 கொலை - அச்சத்தில் பொதுமக்கள்

ABOUT THE AUTHOR

...view details