தமிழ்நாடு

tamil nadu

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பை எதிர்த்து வழக்கு - அலுவலர்களை வசைபாடிய நீதிபதிகள்

By

Published : Sep 12, 2022, 8:01 PM IST

தூத்துக்குடி விளாத்திகுளம் கல்லாறு ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்றக்கோரிய வழக்கில் சம்மந்தப்பட்ட அலுவலர்களை விமர்சித்த நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

Etv Bharat madurai
Etv Bharat Madurai Court

மதுரை:தூத்துக்குடி விளாத்திகுளத்தைச்சேர்ந்த பாக்கிய ஜோசப் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத்தாக்கல் செய்தார். அதில், "தூத்துக்குடி பெரியசாமிபுரத்தில் உள்ள கல்லாறு ஓடை புறம்போக்குப்பகுதியை அலுவலர்களின் துணையுடன் சில தனிநபர்கள் ஆக்கிரமித்து உப்பளம் நடத்தி வருகின்றனர்.

இதனால் மழைநீர் செல்ல வழியின்றி, வெள்ளம் ஏற்படும் நாள்களில் தண்ணீர் குடியிருப்புகளுக்கு புகுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். விவசாயப்பணி பாதிக்கப்படுகிறது. நிலத்டி நீர்மட்டம் குறைந்து, நீரின் உவர்ப்புத் தன்மை அதிகரித்து வருகிறது.

இந்த கல்லாறு ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே விளாத்திகுளம், கல்லாறு ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வு, ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பல முறை மனு அளித்தும் அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை; மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருகிறனர் எனக்குறிப்பிட்டு வழக்கை செப்டம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கு...தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details