தமிழ்நாடு

tamil nadu

இ-பாஸ் இல்லாமலே தமிழ்நாட்டிற்குள் வரும் வாகனங்கள்!

By

Published : Apr 10, 2021, 10:54 PM IST

கிருஷ்ணகிரி : தமிழ்நாடு மாநில எல்லைப் பகுதியில் கரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் ஏதும் பின்பற்றப்படாமல், இ-பாஸ் நடைமுறைகள் இல்லாமலே வாகனங்கள் தமிழ்நாட்டிற்கு வருகின்ற நிலையுள்ளது.

Vehicles entering Tamil Nadu without e-pass
Vehicles entering Tamil Nadu without e-pass

தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டமாக பரவும் கரோனா பரவலை தடுக்க இன்று (ஏப்.10) முதல் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி,

  1. தொழிற்சாலைகள், வணிகவளாகங்கள், நகைக்கடைகள் உள்ளிட்ட இடங்களை 50 சதவீத வாடிக்கையாளர்கள்
  2. டீக்கடை, உணவு விடுதிகளில் 50 சதவீத இருக்கைகள்
  3. கார்களில், மூன்று பேர் ஆட்டோக்களில் இரண்டு பேர் பயணிக்க வேண்டும்
  4. தனியார், அரசுபேருந்துகளில் அமர்ந்து பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டும்
  5. பொதுஇடங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசங்கள் அணிய வேண்டும்
  6. தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும்
  7. கிருமிநாசினி மருந்துகளை அனைவரும் உபயோகப்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இந்த கட்டுப்பாடு நடைமுறைகள் அமுலுக்கு வந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசந்திரபானுரெட்டி உத்தரவின் பேரில் இந்த நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

கடும் கட்டுப்பாடு விதிமுறைகளில் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருவோர் கட்டாயம் இ-பாஸ் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகா, மகாராஷ்டிரா, உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கர்நாடக மாநிலம் வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழையும் வாகனங்கள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் தமிழ்நாட்டிற்குள் வருகிறது. தமிழ்நாடு மாநில எல்லைப் பகுதியில் கரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் ஏதும் பின்பற்றப்படவில்லை, இ-பாஸ் நடைமுறைகள் இல்லாமலே தமிழ்நாட்டிற்கு வருகின்ற நிலை உள்ளது.

கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி சோதனைச்சாவடியில் தமிழ்நாடு வழியாக கர்நாடகா செல்லும் கேரளா,பஞ்சாப், மகாராஷ்டிரா, சண்டிகர் உள்ளிட்ட ஐந்து மாநில வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அதிலிருக்கும் பயணிகளுக்கு வெப்பமானி சோதனைகள் செய்யப்பட்ட பின்னரே கர்நாடகா வழியாக பிற மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: 'அரக்கோணம் ரெட்டை கொலைக்கு பாமக கண்டன அறிக்கை விடலயே' - திருமாவளவன் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details