தமிழ்நாடு

tamil nadu

டீக்கடையில் வைத்து இளைஞர் கொடூரமாக வெட்டி கொலை.. பழிக்கு பழியா?.. போலீஸ் விசாரணை

By

Published : May 12, 2023, 8:19 PM IST

ஓசூரில் டீக்கடையில் இருந்த இளைஞரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் பழிக்குப் பழி கொலை நடந்திருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, பெரியார் நகர் பகுதியில் டீக்கடையில் இருந்த இளைஞர் ஒருவரை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் பட்டபகலில் அரிவாளால் சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்த இளைஞரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், உயிரிழந்த இளைஞர் சொப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திலக் (25) என்பது தெரியவந்தது. சொப்பட்டி கிராமத்தில் கடந்த ஆண்டு கிரிக்கெட் விளையாட்டின்போது மோகன் பாபு (25) என்பவருடன் சக நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீ ராம் சேனா (தமிழ்நாடு) ஓசூர் நகரச் செயலாளராக இருந்து மோகன் பாபு என்பவரை, மது அருந்தியபோது கிரிக்கெட் சண்டைக்கு பழி தீர்க்க அதே கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் அவரிடம் சண்டையிட்டு கத்தியால் மார்பு, வயிறு உள்ளிட்டப் பகுதிகளில் கத்தியால் குத்திக் கொலை செய்து தப்பியோடினர்.

மோகன்பாபுவை கத்தியால் குத்திக்கொன்ற திலக் (22), மூர்த்தி (21), பவன் (22), ஹேம்நாத் (21), சுரேஷ் (22), ராகேஷ் (20) ஆகிய ஆறு பேரை மத்திகிரி காவல் துறையினர் கைது செய்திருந்த நிலையில் தான் இந்த கொலை சம்பவம் பழிக்குப் பழி தீர்க்கும் விதமாக நடந்துள்ளது என்கின்றனர்.

மோகன்பாபு, கொலை செய்யப்பட்டபோது முக்கிய குற்றவாளியாகவும் அணி தலைவனாக செயல்பட்டு வந்த திலக் இன்று ஓசூர் மாநகராட்சி பெரியார் நகர், டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தபோது திலக் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு கொலை பழி தீர்க்க நடந்த சம்பவமாக இருக்கலாம் என ஓசூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கேரளாவில் தமிழக தொழிலாளி கொலை - தூங்கிக் கொண்டிருந்தபோது அடித்துக் கொல்லப்பட்ட கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details