தமிழ்நாடு

tamil nadu

ஓசூர் புத்தகத் திருவிழா: தொடங்கி வைத்த அமைச்சர் சக்கரபாணி!

By

Published : Jul 14, 2023, 6:14 PM IST

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் 12ஆவது புத்தகத் திருவிழாவை அமைச்சர் சக்கரபாணி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

Etv Bharat புத்தக திருவிழாவை திறந்து வைத்த அமைச்சர் சக்கரபாணி
Etv Bharat புத்தக திருவிழாவை திறந்து வைத்த அமைச்சர் சக்கரபாணி

ஓசூர் புத்தகத் திருவிழா: தொடங்கி வைத்த அமைச்சர் சக்கரபாணி!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை இளைஞர் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தக திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திருவிழா 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத் திருவிழாவானது, இன்று தொடங்கி வரும் 25ஆம் தேதி வரை 12 நாள்களுக்கு நடைபெறும்.

இந்த புத்தகத் திருவழாவை இன்று (ஜூலை 14) அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் சரயு, சட்டப்பேரவை உறுப்பினர், மேயர் ஆகியோர் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தனர். இந்த புத்தகத் திருவிழாவில், 95 அரங்குகள் அமைக்கப்பட்டு, லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மாணவர்களை மையமாகக் கொண்டும் நடத்தப்படும் இந்த புத்தகத் திருவிழாவில், இந்த ஆண்டு 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 90 லட்சம் ரூபாய் அளவுக்கு விற்பனையும் நடைபெறும் என ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஓசூரில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் புத்தகத்திருவிழா 12ஆம் ஆண்டாக இன்று தொடங்கப்பட்டிருப்பதால் புத்தக வாசிப்பாளர்கள் மத்தியிலும், பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

தினந்தோறும் காலை 11 மணிக்குத் தொடங்கும் புத்தகத்திருவிழா இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை பள்ளிக்குழந்தைகளின் நடன கலைநிகழ்ச்சிகளும், பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளும், 7 மணி முதல் எழுத்தாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்களின் கருத்துரைகளும் வழங்கவுள்ளனர்.

கடந்தாண்டு 80 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு புத்தகத் திருவிழாவில் 95 அரங்குகளில் 80 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. தினந்தோறும் அரசுப் பள்ளி மாணவர்கள் அழைத்துவரப்பட்டு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அறிவியல் கல்வி குறித்து நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.

புத்தகத் திருவிழாவில் ஆன்மிகம், அரசியல், அறிவியல், சிந்தனை, மருத்துவம் மற்றும் குட்டீஸ்களை கவரும் வகையில் எண்ணற்ற புத்தகங்க அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜுலை 14 முதல் 25 வரை 12 நாட்கள் நடைபெறும் "புத்தகத்திருவிழா" புத்தகப் பிரியர்களுக்கு நிச்சயம் தவிர்க்க முடியாத திருவிழாவாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க:ஏற்காடு படகு இல்லத்தில் புதிய உணவகம்; சுற்றுலாத்துறை அமைச்சர் இராமச்சந்திரன் திறந்து வைப்பு..

ABOUT THE AUTHOR

...view details