தமிழ்நாடு

tamil nadu

தேசிய அளவிலான ஏர் ரைபிள் சாம்பியன்ஸ் போட்டிக்கு ஓசூர் மாணவிகள் தகுதி.. காவல் ஆய்வாளர் வாழ்த்து!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 1:34 PM IST

Hosur girls qualifying for the National Air Rifle Championship: டெல்லியில் நடைபெற்ற 66வது தேசிய அளவிலான ஏர் ரைபிள் சாம்பியன்ஸ் போட்டியில், ஓசூரைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெற்றதை அடுத்து, ஓசூர் ஏர் ரைபிள் கோட்சிங் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

தேசிய அளவிலான ஏர் ரைபிள் சாம்பியன்ஸ் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகளுக்கு  ஓசூர் காவல் ஆய்வாளர் வாழ்த்து
தேசிய அளவிலான ஏர் ரைபிள் சாம்பியன்ஸ் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகளுக்கு ஓசூர் காவல் ஆய்வாளர் வாழ்த்து

தேசிய அளவிலான ஏர் ரைபிள் சாம்பியன்ஸ் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகளுக்கு ஓசூர் காவல் ஆய்வாளர் வாழ்த்து

கிருஷ்ணகிரி: 66வது தேசிய அளவிலான ஏர் ரைபிள் சாம்பியன் போட்டிகள் நவம்பர் 27 முதல் டிசம்பர் 2 வரை டெல்லியில் நடைபெற்றன. இந்தியா முழுவதும் பல்வேறு வயதுகளின் பிரிவில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்த நிலையில், தமிழகத்தில் இருந்து 700க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் இந்த போட்டிகளில் பங்கேற்றிருந்தனர்.

அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரைபிள் கோச்சிங் அசோசியேஷன் சார்பில், 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் பங்கேற்ற தனியார் பள்ளி மாணவி சமிஷா, 600க்கு 596.6 புள்ளிகளையும், நட்சத்திரா 600க்கு 591.3 புள்ளிகளையும் பெற்று, இந்திய அணிக்கான தேர்வு போட்டிகளுக்கும், மூன்று ஆண்டுகள் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளுக்கும் அடுத்தடுத்து தேர்வாகி உள்ளனர்.

இதிலும் வெற்றி பெற்றால் ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க நேரடியாக தகுதி பெறுவார்கள். இந்த நிலையில், ஓசூரைச் சேர்ந்த மாணவிகளுக்கு, ஓசூர் ஏர் ரைபிள் கோட்சிங் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ஓசூர் நகர காவல் ஆய்வாளர் சிவக்குமார் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இதையும் படிங்க:ஓசூர் நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்ட 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்.. வனத்துறையினர் எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details