தமிழ்நாடு

tamil nadu

கிருஷ்ணகிரியில் பலத்த காற்றுடன் கனமழை: முதியவர் உயிரிழப்பு

By

Published : Apr 6, 2021, 6:20 AM IST

கிருஷ்ணகிரி: பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் தொழுகைக்கூடம் சரிந்து விழுந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

Heavy rain
Heavy rain

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே கடுமையான வெயிலின் தாக்கம் இருந்துவந்தது. இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 5) மாலை திடீரென பலத்த சூறைக்காற்றுடன்கூடிய கனமழை பெய்தது.

இந்த மழை, சூறைக்காற்று காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் கடைகளின் பெயர்ப் பலகைகள், மரங்கள் முறிந்து விழுந்தன.

மேலும் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே ஓலையால் அமைக்கப்பட்ட இஸ்லாமியர்களின் தொழுகைக்கூடம் சரிந்து விழுந்தது. இதில் ஜாபர் (60) என்னும் முதியவர் பலத்த காயம் அடைந்தார்.

கிருஷ்ணகிரியில் பலத்த காற்றுடன் கனமழை

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் ஜாபரை மீட்டனர். பின் அவரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஜாபர் உயிரிழந்தார்.

ABOUT THE AUTHOR

...view details