தமிழ்நாடு

tamil nadu

ஓசூர் அருகே போலி டாக்டர்கள்: ஒருவர் கைது..மற்றொருவர் தலைமறைவு!

By

Published : May 6, 2021, 8:08 AM IST

ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர்களில் ஒருவர் கைது, மற்றொருவர் தலைமறைவானார்.

ஆனந்
ஆனந்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகே கோட்டையூர் கிராமத்தில் போலி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக அஞ்செட்டி காவல் துறையினருக்கு தகவல் வந்தது.

அத்தகவலின் அடிப்படையில், அஞ்செட்டி காவல் துறையினர், தேன்கனிக்கோட்டை தலைமை மருத்துவர் ஞானமீனாட்சி தலைமையிலான மருத்துவ அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அருணாசலம் மருந்தகத்தில் மருத்துவம் படிக்காமல் இரண்டு போலி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. பின் காவல் துறையினர் கோட்டையூரை சேர்ந்த போலி மருத்துவர் ஆனந்தன் (42) என்பவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள மற்றொரு போலி மருத்துவரான அங்கமுத்து (47) என்பரை தேடி வருகின்றனர். பின்னர் காவல் துறையினர் கைதான ஆனந்தனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ அலுவலர்கள் அந்த மருந்தகத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்க்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:செங்கல் சூளைகளுக்காக வெட்டப்பட்ட பனை மரங்கள்- நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதம்

ABOUT THE AUTHOR

...view details