தமிழ்நாடு

tamil nadu

கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கில் மீண்டும் தீ விபத்து - வருவாய் அலுவலர், தாசில்தார் உள்ளிட்டோர் படுகாயம்

By

Published : Aug 8, 2023, 4:17 PM IST

Updated : Aug 8, 2023, 5:56 PM IST

கிருஷ்ணகிரி அருகே பட்டாசு சேமிப்புக் கிடங்கில் நடந்த தீ விபத்தில், கிடங்கின் மேலாளர், ஆய்வுக்காக சென்ற அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கில் மீண்டும் தீ விபத்து..!
கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கில் மீண்டும் தீ விபத்து..!

கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கில் மீண்டும் தீ விபத்து

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள J. காருப்பள்ளி என்னும் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு அருகே இருக்கும் பட்டாசு சேமிப்பு கிடங்கு செயல்படுவதை ஆய்வு செய்ய நில வரி திட்ட மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, தனி தாசில்தார் முத்துப்பாண்டி உள்ளிட்டோர் சென்றிருந்தனர். அப்போது பட்டாசு கிடங்கில் திடீரென தீப்பற்றி பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானது.

அதனையடுத்து டிஆர்ஓ, தனி தாசில்தார் மற்றும் பட்டாசு கிடங்கின் மேலாளர் ஆகியோர் பலத்த காயங்கள் அடைந்த நிலையில் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் திருமதி சரயு மற்றும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர், மேயர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இந்நிலையில் பலத்த காயமடைந்த டிஆர்ஓ, கிடங்கின் மேலாளர் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் சரயு, பட்டாசு கிடங்குகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தனிக்குழு, J.காருப்பள்ளி கிராமத்தில் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் கிடங்கை பார்வையிடச் சென்றதாகவும்;

இதையும் படிங்க:உணவு கழக குடோனில் சரியான பராமரிப்பு இல்லாததால் பொதுமக்களுக்கு குடைச்சல் கொடுக்கும் வண்டுகள்!

சோதனையின்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் வருவாய் அலுவலர் பாலாஜி, தனி தாசில்தார் முத்துப்பண்டி ஆகியோர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்களோடு இருந்த பட்டாசு மூலப்பொருட்கள் கிடங்கின் மேலாளரும் பலத்த காயமடைந்துள்ளதாகவும் கூறினார், மாவட்ட ஆட்சியர்.

தொடர்ந்து மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் மற்றும் பட்டாசு கிடங்கு மேலாளர் மருத்துவர்களின் பரிந்துரையின் படி மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுள்ளதாகவும் கூறினார்.

இந்த பட்டாசு தயாரிப்பு கிடங்கின் அனுமதி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அந்த தொழிற்சாலை 2025ஆம் ஆண்டு வரை இயங்குவதற்கு அரசிடம் அனுமதி பெற்றுள்ளதையும் தெரிவித்தார். மேலும் இந்த விபத்து குறித்து மாவட்ட தலைமை காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை ஆட்சியர் ஆகியோர் விசாரிக்க சென்றிருப்பதாகவும், விசாரணை முடிந்ததும் முழு தகவல்கள் பின்னர் தெரிவிப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆரணியில் தரமற்ற சிமெண்ட் சாலை குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்

Last Updated : Aug 8, 2023, 5:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details