தமிழ்நாடு

tamil nadu

திருமணமாகாத விரக்தி: தாயைக் கொன்ற மகன் கைது

By

Published : Dec 18, 2021, 12:40 PM IST

கடவூர் கிழக்கு அய்யம்பாளையம் பகுதியில் திருமணம் செய்துவைக்க வலியுறுத்தி தாயுடன் தகராறில் ஈடுபட்ட மகன் தாக்கியதில் அவரது தாய் சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

son murder own mother  திருமணமாகாத விரக்தி  தாயை கொன்ற மகன் கைது  கரூரில் அதிர்ச்சி சம்பவம்  karrur unmarried son done crime  arrested by police
தாயை கொன்ற மகன் கைது

கரூர்:கடவூர் அருகே உள்ள கிழக்கு அய்யம்பாளையம் தெற்குப் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், மருதம்மாள் என்கிற பாப்பாத்தி (55) தம்பதியருக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.

அனைவருக்கும் திருமணம் ஆன நிலையில் இவர்களது கடைசி மகன் கேசவன் (29) என்பவருக்கு மட்டும் திருமண ஏற்பாடு மேற்கொள்ளாத காரணத்தினால் பெற்றோருடன் தொடர்ந்து வாய்த் தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த கேசவன் அடிக்கடி சண்டையிட்டுள்ளார். சம்பவத்தன்று காலை 9 மணி அளவில் கேசவன் அவரது தாய் மருதம்மாளுடன் தகராறில் ஈடுபட்டுத் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்து மருதம்மாள் உயிரிழந்தார்.

இது குறித்து பாலவிடுதி காவல் துறையினருக்கு அளித்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து உடலைக் கைப்பற்றி கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு மேற்கொள்ள அனுப்பிவைத்தனர்.

மேலும் பெற்ற தாயைக் கொன்றுவிட்டு தப்பி ஓடிய மகனை காவல் துறையினர் தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திறக்கப்பட்டது ராமோஜி பிலிம் சிட்டி - சுற்றுலாப் பயணிகளுக்கு பிரமாண்ட வரவேற்பு

ABOUT THE AUTHOR

...view details