தமிழ்நாடு

tamil nadu

2 கிமீ நடந்துசென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட ஸ்டாலின்

By

Published : Mar 26, 2021, 10:27 PM IST

திருச்சி: குளித்தலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரண்டு கிமீ நடந்துசென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

MK stalin
மு.க ஸ்டாலின்

திருச்சியில் பரப்புரையை முடித்துவிட்டு மதியம் 12 மணியளவில் கரூர் மாவட்டம் வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், குளித்தலைச் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மாணிக்கத்தை ஆதரித்துப் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது, குளித்தலைப் பேருந்து நிலையத்திலிருந்து கடைவீதி சுங்ககேட் வரை சுமார் இரண்டு கிமீ நடந்து சென்றே மக்களிடம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். சாலையில் அவரைப் பார்த்த பொதுமக்கள், செல்பி எடுத்தும் கைக்குலுக்கியும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

2 கிமீ நடந்துசென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்ட முதல் சட்டப்பேரவைத் தொகுதி என்பதால், அங்கு வாக்காளர்களை மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பரப்புரையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க:செங்கல் திருடியதாக உதயநிதி ஸ்டாலின் மீது பாஜக புகார்!

ABOUT THE AUTHOR

...view details