தமிழ்நாடு

tamil nadu

Karur Girl Suicide: பாலியல் புகார் விசாரணையை தாமதித்த காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை

By

Published : Nov 21, 2021, 8:52 AM IST

கரூரில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் எஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளார் (Police Inspector change to Waiting list).

மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகம்
மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகம்

கரூர்: பிரபல தனியார்ப் பள்ளியில் படித்து வந்த பிளஸ்டூ மாணவி நேற்று (நவ.19) மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்து கொண்டார்.

இது சம்பந்தமாக, வெங்கமேடு காவல் ஆய்வாளர் கண்ணதாசன் தற்கொலைக்கானக் காரணம் குறித்து கடிதத்தில் குறிப்பிட்டபடி பாலியல் தொல்லை கொடுத்தவர்களைக் கண்டறிவதில் விரைந்து நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளார்.

இதன் காரணமாகக் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சுந்தர வடிவேல், வெங்கமேடு காவல் நிலைய காவல் ஆய்வாளர் கண்ணதாசனைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

தனிப்படை விசாரணை

இதனிடையே கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதாஞ்சலி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பள்ளியில் சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதா அல்லது வேறுவகையில் தொந்தரவு இருந்ததா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல

இதையும் படிங்க: பள்ளிகளில் நிகழ்த்தப்படும் பாலியல் துன்புறுத்தல்: POSH சட்டத்தின் கீழ் அனைத்துப் பள்ளிகளிலும் புகார் குழு!

ABOUT THE AUTHOR

...view details