தமிழ்நாடு

tamil nadu

செந்தில்பாலாஜி கைதுக்கு ஜோதிமணி கண்டனம்!

By

Published : Jun 14, 2023, 1:24 PM IST

அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் எம்பி ஜோதிமணி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைதானதைக் கண்டித்து எம்பி ஜோதிமணி கண்டனம்
அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைதானதைக் கண்டித்து எம்பி ஜோதிமணி கண்டனம்

கரூர்: இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அமலாக்க துறையால் சட்டவிரோதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருப்பதாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கரூர் மாவட்ட அரசியலைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் எம்பி ஜோதிமணிக்கும் செந்தில் பாலாஜிக்கு இடையே ஏற்கனவே கருத்து முரண்பாடு ஏற்பட்டு உள்ளது.

ஆகவே, கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற எந்த நிகழ்ச்சியிலும் அமைச்சர் செந்தில் பாலாஜியும், காங்கிரஸ் கட்சி எம்பி ஜோதிமணியும் இணைந்து கலந்து கொண்டது இல்லை. மேலும், அரசு நிகழ்ச்சிகளை பெரும்பாலும் ஜோதிமணி புறக்கணிக்கப்படும் வந்தார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் ஆதரவாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்று அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அதன் பின் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. எனவே மருத்துவச் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதன் இடையே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் எம்பி ஜோதிமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் “பலமணி நேரம் முறையாக விசாரணைக்கு ஒத்துழைத்த அமைச்சரை நள்ளிரவில் ஏன் கைதுசெய்ய வேண்டும்?. தமிழக அரசின் இதயமான தலைமை செயலகத்திற்குள் அத்துமீறி நுழைய வேண்டிய அவசிய தான் என்ன?.

எதிர்க் கட்சிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளைத் தவறாக பயன்படுத்துவதன் தொடர்ச்சியாகவே இதையும் பார்க்க வேண்டி உள்ளது. அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவை பாஜகவின் துணை அமைப்புகளாக செயல்படுகின்றன என்பதை இந்த அத்துமீறல் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை தொடர்ந்து எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் தவறாக பயன்படுத்தப்படுவதையும், அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

கரூர் மாவட்டத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி செந்தில் பாலாஜி ஆகியோர் இடையே விரிசல் இருந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைதானதை கண்டித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வெளியிட்டு உள்ள கண்டன அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஜோதிமணியை வெற்றி பெறச் செய்ய தீவிரமாக உடன் பணி ஆற்றியவர் செந்தில் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Senthil Balaji Update: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது.. நள்ளிரவு முதல் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details