தமிழ்நாடு

tamil nadu

கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் திமுக வெற்றி என அறிவிப்பால் சர்ச்சை

By

Published : Dec 20, 2022, 6:55 AM IST

கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேர்தலில் திடீர் திருப்பமாக தேர்தல் நடத்தும் அலுவலரும் கரூர் மாவட்ட ஆட்சியருமான பிரபுசங்கர் வாக்கு எண்ணிக்கை விவரங்களை காண்பித்ததாக கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

ஊராட்சி குழு துணை தலைவர் தேர்தலில் திடீர் திருப்பம்

கரூர் ஊராட்சி குழு துணை தலைவர் மறைமுக தேர்தல் நேற்று (டிசம்பர் 19) கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஊராட்சியில் மொத்தம் 12 உறுப்பினர்கள் உள்ள நிலையில், வருகை புரிந்த 11 பேரில் , திமுக 6, அதிமுக 5 பேர் என தேர்தலில் பங்கேற்றனர்.

தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக முடிவுகளை அறிந்து கொள்வதற்காக, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக திமுகவினர் கூடி ஒருவருக்கொருவர் கோஷமிட்டு, மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதனிடையே கடத்தப்பட்டதாக கூறப்படும், அதிமுக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திருவிக தவிர, 11 பேரும் மறைமுக தேர்தலில் வாக்களித்துவிட்டு வெளியே வந்தனர். மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மற்றும் வெற்றி நிலவரங்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு முன்பு தேர்தல் நடத்தும் அலுவலர் முறையிட்ட சீலில் எதிர்வரும் டிசம்பர் 22ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.

அதன் பின்னரே போதிய உறுப்பினர்கள் வருகை இல்லாத காரணத்தினால் 5 முறை தள்ளி வைக்கப்பட்ட கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவுள்ளது. இதனிடையே திமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கூட்டாக செய்தியாளர்களை வாக்குப்பதிவு முடிந்தவுடன் சந்தித்தனர்.

அப்போது பேசிய மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துணைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட தேன்மொழி, மொத்தம் வருகை புரிந்த 11 உறுப்பினர்களில் ஏழு பேர் தனக்கு வாக்களித்திருப்பதாகவும் , மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவராக தன்னை தேர்வு செய்துள்ளதாகவும், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக மாவட்ட துணை தலைவர் வேட்பாளர் ரமேஷ் என்பவருக்கு நான்கு ஓட்டுகள் கிடைத்துள்ளதாகவும் அதனை அனைத்து உறுப்பினர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் காண்பித்ததாகவும் தெரிவித்தார்.

மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் அத்தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும் மாவட்ட ஊராட்சி குழு 5வது வார்டு உறுப்பினருமான தேன்மொழிதியாகராஜன செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் முடிவுகளை கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 61 இடங்களில் புதிதாக வாடகை அடுக்குமாடி குடியிருப்பு: அமைச்சர் முத்துசாமி

ABOUT THE AUTHOR

...view details