தமிழ்நாடு

tamil nadu

லஞ்ச ஒழிப்பு துறையினர் காரை சிறைப்பிடித்த அதிமுக தொண்டர்கள்!

By

Published : Jul 23, 2021, 7:10 AM IST

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினரின் காரை அதிமுக தொண்டர்கள் சிறைப்பிடித்து கண்டன முழக்கங்களை எழுப்பியதால் கரூர் ஆண்டான்கோயில் அருகே பரபரப்பு நிலவியது.

ex-minister-vijayabaskar-anti-corruption-vigilance-ride-end
லஞ்ச ஒழிப்பு துறையினர் காரை சிறைபிடித்த அதிமுக தொண்டர்கள்!

கரூர்:அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, ஆதரவாளர்களின் வீடு, நிறுவனங்கள் என 26 இடங்களில் ஜீலை 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை 14 மணித்திற்கு பிறகு இரவு 9 மணி அளவில் முடிவுக்கு வந்தது.

இந்தச் சோதனையில், ரூ.25.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் குறித்து சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிகின்றன.

லஞ்ச ஒழிப்பு துறையினர் காரை சிறைபிடித்த அதிமுக தொண்டர்கள்

கரூர் ஆண்டான்கோயில் கிழக்கு ரெயின்போ நகரில் சாயப்பட்டறை ரயில் சோதனை முடிந்து 5 வாகனங்களில் வெளியே வந்த லஞ்ச ஒழிப்பு துறை அலுவலர்களை அதிமுக தொண்டர்கள் 200க்கும் மேற்பட்டோர் மறித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். காவல்துறை அலுவலர்கள் போதிய பாதுகாப்பு மேற்கொண்டு லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்களின் காரை அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்களால் கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் குறித்த முக்கிய ஆவணங்களால் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தரப்பில் கடும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டால் தமிழ்நாடு அரசியலில் அது சில முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க:கட்சி பின்னே நிற்கும் - விஜயபாஸ்கர் விவகாரத்தில் அதிமுக அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details