தமிழ்நாடு

tamil nadu

கரூர்: வீடு இடிந்த விபத்தில் மூதாட்டி பலி.. ஆட்சியர் நேரில் ஆய்வு!

By

Published : Nov 29, 2022, 10:28 PM IST

கரூர் அருகே திடீரென வீடு இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகள் சிக்கிய மூதாட்டியை 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்டனர்.

கரூரில் இடிந்து விழுந்த பழமையான வீட்டிற்குள் சிக்கிய மூதாட்டி: மக்கள் அச்சம்
கரூரில் இடிந்து விழுந்த பழமையான வீட்டிற்குள் சிக்கிய மூதாட்டி: மக்கள் அச்சம்

கரூர்: அரவக்குறிச்சி கடைவீதி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த நிலையில் பழமை வாய்ந்த கட்டிடத்தில் பாத்திமா கவி (74) என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இவர் இன்று (நவ.29) காலை 7 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள குப்பை தொட்டியில் குப்பை போட்டு விட்டு மீண்டும் வீடு திரும்பிய போது வீடு எதிர்பாராத விதமாக திடீரென சரிந்து விழுந்ததில், மூதாட்டி இடிபாடுகளுக்குள் மாட்டிக் கொண்டார்.

பின்னர், அரவக்குறிச்சி தீயணைப்புத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் உள்ளே சிக்கி உள்ள முதாட்டியை மீட்பதற்கு நடைபெற்ற மீட்பு பணிகளை, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.

இப்பணிகளில் கரூர் மற்றும் அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையங்களில் சேர்ந்த 25 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு, மதியம் சுமார் 12 மணியளவில் நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இடுப்பாடுக்குள் சிக்கிய மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டார். மேலும் பிரேதத்தை அரவக்குறிச்சி போலீசார் கைப்பற்றி உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கரூரில் இடிந்து விழுந்த பழமையான வீட்டிற்குள் சிக்கிய மூதாட்டி: மக்கள் அச்சம்

அரவக்குறிச்சி பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் பழமையான வீடுகள் பயன்படுத்தப்படாமலும், சில வீடுகளில் வாடகைக்கு குடியிருப்போர் அதிகமாக உள்ளனர். இந்த விபத்தால் அப்பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையாக உள்ள வீடுகளில் குடியிருப்போர் கடும் அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க:6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

ABOUT THE AUTHOR

...view details