தமிழ்நாடு

tamil nadu

பிரமாண்டமாகச் சென்று வேட்புமனு தாக்கல்செய்த திமுக வேட்பாளர்

By

Published : Mar 16, 2021, 7:22 PM IST

திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கரூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்தார்.

திமுக வேட்பாளர்
திமுக வேட்பாளர்

கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில், அம்மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி களம் காண்கிறார். இவர் இன்று (மார்ச் 16) கரூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்துவிட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

மேலும் அவர் வேட்புமனு தாக்கல்செய்யச் சென்றபோது, ஆயிரக்கணக்கான திமுக, கூட்டணிக் கட்சி தொண்டர்களைத் திரட்டி மிகவும் பிரமாண்டமாக நடத்தியுள்ளார். அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது உடன் பிறந்த சகோதரர் அசோக்குமாரும் மனு தாக்கல்செய்தார்.

வேட்புமனு தாக்கல்செய்த திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி

அதிமுக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் செந்தில் பாலாஜி மீது பல விமர்சனங்களைப் பரப்பிவருகின்றனர். அதில் ஒன்று திமுகவில் இணைந்ததற்குப் பிறகு செந்தில் பாலாஜி முன்னணி திமுக நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை இதன்மூலம் அதை அவர் தவிடுபொடியாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி அதிரடி பேச்சு

ABOUT THE AUTHOR

...view details