தமிழ்நாடு

tamil nadu

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் - ஆசை வார்த்தை கூறி ரூ.25 லட்சம் மோசடி புகார்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 4:06 PM IST

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி 25 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தோடு தலைமறைவான கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளனர்.

பிட்காயின் முதலீடு மூலம் கரூரில் 25 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
பிட்காயின் முதலீடு மூலம் கரூரில் 25 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

பிட்காயின் முதலீடு மூலம் கரூரில் 25 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

கரூர் : வெங்கமேடு திட்டசாலை பகுதியை சேர்ந்த ஆஷிக் மற்றும் அவரது மனைவி ரேஷ்மா பர்வீன் உள்ளிட்ட 9 பேர் காந்தி கிராமம் அருகே உள்ள ராமனூர் கே.வி.பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் சேமிப்பாக தொகை செலுத்தினால் ஒவ்வொரு மாதமும் லாபத் தொகை வழங்குவதாக ஆசை வார்த்தை கூறி 9 நபர்களிடம் இருந்து 25 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை முதலீடு பெற்றதாக கூறப்படுகிறது.

மேலும், சிலர் அந்நிறுவனத்தை நம்பி தங்களது சேமிப்பு பணத்தை செலுத்தியதாக சொல்லப்படுகிறது. சில மாதங்கள் சரியாக தொகையினை வழங்கிய நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தொகை நிறுத்தப்பட்டதால் சந்தேகம் அடைந்தவர்கள் அலுவலகத்திற்கு சென்று பார்த்த போது, அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அந்நிறுவனத்தை நடத்தி வந்த கரூர் வடக்கு காந்திகிராமம் பிருந்தாவன் பள்ளி அருகே வசித்து வரும் விஷ்ணுபிரியா மற்றும் அவரது கணவர் வேலாயுதம், விஷ்ணுபிரியாவின் மாமனார் மாமியார் குமாரசாமி, ராமேஸ்வரி ஆகியோர் மீது கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக, இரு தரப்பினரும் அழைத்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவில் நேற்று (டிச. 1) விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது பணத்தை திருப்பி தருவதாக ஒப்புக்கொண்ட நிதி நிறுவனத்தினர் வெளியே சென்று பணத்தை எடுத்து வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தவர்களுக்கு காவல்துறை வழங்கிய அறிவுரைகள் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக இருந்ததால் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் பாதிக்கப்படவர்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காத்திருந்தனர். இது குறித்து பாதிக்கப்பட்ட வெங்கமேடு பகுதியை ஆசிக் என்பவர் ஈடிவி பாரத் செய்தி தளத்திற்கு அளித்த பேட்டியில், "நம்பிக்கை அடிப்படையில் சேமிப்பு பணத்தை செலுத்தினோம். தாங்கள் ஏமாற்றப்பட்டது அறிந்து புகார் அளித்தும் இதுவரை காவல்துறை பணத்தை மீட்டு தர நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

மாறாக பணம் எடுத்து வருவதாக கூறி எதிரிகள் போலீஸ் பாதுகாப்புடன் வெளியே சென்று விட்டனர். இதுவரை எஸ்.பி அலுவலகத்திற்கு பணத்துடன் வரவில்லை. மாறாக உடன் சென்ற காவலர் மட்டுமே அலுவலகத்திற்கு திரும்பி விட்டார். தங்களுக்கு பணத்தைப் பெற்றுத் தர காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: கரூரில் தன்னுடன் பேச மறுத்த நண்பனை கத்தியால் தாக்கிய மாணவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details