தமிழ்நாடு

tamil nadu

பயிர்க்கடன் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் பேரூராட்சித் தலைவர்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

By

Published : Jul 4, 2021, 6:58 AM IST

Updated : Jul 4, 2021, 8:56 AM IST

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூட்டுறவு வங்கி ஒன்றில் முன்னாள் பேரூராட்சித் தலைவருக்கு சொந்தமான கல்குவாரி நிலத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பயிர்க்கடன் வழங்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கூட்டுறவு வங்கி
கூட்டுறவு வங்கி

கரூர்: கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் செயல்பட்டுவரும் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் பேரூராட்சியில் தலைவராக நான்கு முறை பதவி வகித்த சித்தலவாய் பகுதியில் வசிக்கும் மீசை செல்வராஜ் அதிமுக ஆட்சிக் காலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு பயிர்க்கடன் பெற்றுள்ளார்.

கூட்டுறவு வங்கி செயலாளராக உள்ள கிருஷ்ணமூர்த்தி, அதிமுக பிரமுகரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவருமான வேணுகோபால் ஆகியோர் உதவியுடன், சேங்கல் ஊராட்சியில் உள்ள சின்ன சேங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரி நிலத்திற்கு பயிர்க்கடனாக ஒரு லட்சம் ரூபாய் வரை மீசை செல்வராஜ் பெற்றுள்ளார்.

பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலத்திற்கான சர்வே எண்கள் ஆய்வு செய்யப்பட்டபோது இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில், தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி முன்னாள் தலைவர் மீசை செல்வராஜ், அதிமுகவைச் சேர்ந்த வேணுகோபால் இருவரும் திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

விவசாயிகள் என்ற போர்வையில் அரசியல்வாதிகள் இத்தகைய பயிர்க்கடன் மோசடிகளில் ஈடுபடுவது தொடர்கதை ஆகி வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:'எதிர்காலம் குறித்த கவலை எனக்கில்லை' - கட்சித் தாவியவுடன் காலரை தூக்கி விட்ட பழனியப்பன்

Last Updated :Jul 4, 2021, 8:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details