தமிழ்நாடு

tamil nadu

'வெங்காயம் விலை ரூ.25 அதுபோன வாரம்; இந்த வாரம் என்ன தெரியுமா?' - குமுறும் பொதுமக்கள்!

By

Published : Nov 6, 2019, 4:22 PM IST

கன்னியாகுமரி: தமிழ்நாடு முழுவதும் பெய்த கனமழையால் காய்கறிகளின் வரத்து குறைந்ததையடுத்து, வீட்டிற்குத் தேவையான அடிப்படை காய்கறிகளின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

vegetables-price-increased-in-kanniyakumari-market

தமிழ்நாடு முழுவதும் கடந்த பத்து தினங்களாக கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் பயிர்கள், காய்கறிகள் சேதமடைந்து வரத்து குறைந்தது. இதனால் குமரி சந்தையில் காய்கறியின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

குமரி காய்கறிச் சந்தையில் கடந்த வாரம் கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்ட வெள்ளரிக்காய் ரூ. 70ஆகவும், காலி ஃப்ளவர் ரூ.20லிருந்து ரூ.60 ஆகவும், காரட், பீன்ஸ் ரூ.40லிருந்து ரூ.70 ஆகவும், வெள்ளைப்பூண்டு கிலோ ரூ. 180லிருந்து கடுமையாக உயர்ந்து ரூ.260க்கும் விற்கப்படுகிறது. இதேபோல் பல்லாரி, சின்ன வெங்காயம் விலையும் ரூ. 100 ரூபாயை நெருங்கி வருகிறது.

10 நாட்களுக்கு முன்பாக கிலோ ரூ.25க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம், தற்போது ரூ. 90க்கும், பெரிய வெங்காயம் ரூ. 95க்கும் விற்கப்படுகிறது. வெள்ளரிக்காய் ரூ. 20லிருந்து ரூ. 70க்கும், வெண்டைக்காய் ரூ. 15லிருந்து ரூ. 60க்கும், முருங்கைக்காய் கிலோ ரூ. 40லிருந்து ரூ. 110க்கும் விற்கப்படுகிறது.

காய்கறிகளின் விலை மூன்று மடங்கு உயர்வு

குமரி காய்கறிச் சந்தையில் அனைத்து காய்கறிகளின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தொடர்ந்து இந்த வாரத்தில் முகூர்த்த நாட்கள், சபரிமலை சீசன் ஆகியவை வரவுள்ளதால் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்தே இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த வெளிமாநிலங்களிலிருந்து கொள்முதல்!

Intro:கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து காய்கறிகள் விலையும் கடும் உயர்வு. கடந்த வாரம் கிலோ 20 ரூபாய்க்கு விற்க்கப்பட்ட வெள்ளரிக்காய் 70 ரூபாயாகவும் காளிபிளவர் 30 ல் இருந்து 60 ரூபாய் காரட் பீண்ஸ் 40 ரூபாயில் இருந்து 70 ரூபாய் வெள்ளை பூண்டு கிலோ 180 ரூபாயில் இருந்து கடுமையாக விலை உயர்ந்து 260 ரூபாய்க்கும் விற்பனை. இதுப்போல் பல்லாரி சின்ன வெங்காயம் விலையும் 100 ரூபாயை நெருங்கி விற்க்கப்படுவதால் இல்லதரசிகள் அதிர்ச்சி. காய்கறி வியாபாரிகள் வேதனை.Body:tn_knk_01_vegetables_prices_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து காய்கறிகள் விலையும் கடும் உயர்வு. கடந்த வாரம் கிலோ 20 ரூபாய்க்கு விற்க்கப்பட்ட வெள்ளரிக்காய் 70 ரூபாயாகவும் காளிபிளவர் 30 ல் இருந்து 60 ரூபாய் காரட் பீண்ஸ் 40 ரூபாயில் இருந்து 70 ரூபாய் வெள்ளை பூண்டு கிலோ 180 ரூபாயில் இருந்து கடுமையாக விலை உயர்ந்து 260 ரூபாய்க்கும் விற்பனை. இதுப்போல் பல்லாரி சின்ன வெங்காயம் விலையும் 100 ரூபாயை நெருங்கி விற்க்கப்படுவதால் இல்லதரசிகள் அதிர்ச்சி. காய்கறி வியாபாரிகள் வேதனை.
தமிழகம் முழுவதும் கடந்த பத்து தினங்களாக கன மழை பெய்த்து வந்தது. பல இடங்களில் பயிர்கள் காய்கறிகள் அறுவடை சேதம் அடைந்தது. இதனால் குமரி சந்தைக்கு காய்கறிகள் வரத்து பாதியாக குறைந்துள்ளது. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கிலோ 25 ரூபாய்க்கு விற்க்கப்பட்ட சின்ன வெங்காயம் 90 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் 95 ரூபாய்க்கும் விற்க்கப்படுகிறது. குறிப்பாக சமையலுக்கு மிக முக்கிய தேவையான வெள்ளை பூண்டு கிலோ 180 ரூபாயில் இருந்து மிக கடுமையாக விலை உயர்ந்து 260 ரூபாய்க்கும் விற்க்கப்படுகிறது. இதைப்போல் வெள்ளரிக்காய் கிலோ 20 ரூபாயில் இருந்து 70 ரூபாய்க்கும் வெண்டைக்காய் 15 ரூபாயில் இருந்து 60 ரூபாய்க்கும் காலிபிளவர் 20 ருபாயில் இருந்து 60 ரூபாய்க்கும் காரட் பீனஸ் 40 ரூபாயில் இருந்து 70 ரூபாய்க்கும் இஞ்சி 120 ரூபாய்க்கும் புடலைங்காய் 30 ல் இருந்து 60 ரூபாய்க்கும் சீனி அவரைகாய் 20 ரூபாயில் இருந்து 40 ரூபாய்க்கும் ஒரு கிலோ முருங்கைகாய் 40 ரூபாயில் இருந்து 110 ரூபாய்க்கும் விலை அதிகரித்து விற்க்கப்படுகிறது. குமரி காய்கறி சந்தையில் அனைத்து காய்கறிகளின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது இல்லதரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தொடர் மழை காரணமாக சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைவாக இருப்பதாலும் இன்னும் பத்து தினங்களில் சபரிமலை சீசனும் மற்றும் தொடர்ந்து சுப முகூர்த்த தினங்கள் வந்து கொண்டு இருப்பதாலும் பொதுமக்களின் தேவைக்கேற்ப சந்தைக்கு காய்கறிகள் வரத்து இல்லாததே இந்த விலை ஏற்றத்திற்க்கு காரணம் என்றும் இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் காய்கறி வியாபாரிகள் தெரிவித்தார்கள்.
Conclusion:

ABOUT THE AUTHOR

...view details