தமிழ்நாடு

tamil nadu

அதிமுக விவகாரத்தில் பாஜக தலையீடு கிடையாது -  எல்.முருகன்

By

Published : Jun 18, 2022, 3:01 PM IST

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை உட்கட்சி விவகாரமாகும், இதில் பாஜக தலையீடு எதுவும் இல்லை என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் பாஜக தலையிடு எதுவும் இல்லை - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் பாஜக தலையிடு எதுவும் இல்லை - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

கன்னியாகுமரி:சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டை முன்னிட்டு நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் 75 நாள்கள் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. அந்த வகையில், நேற்று (ஜூன்.17) கன்னியாகுமரி மாவட்டம் முக்கடல் சங்கமம் பகுதியில் உள்ள விவேகானந்தா கேந்திரத்தில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுடன் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் கலந்துகொண்டார். யோகா பயிற்சியில் ஈடுட்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "இளைஞர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் யோகா போன்ற பயிற்சிகள் கொடுக்கின்றன. எந்த கட்சியிலும் சாதகம், பாதகம் என்று நாங்கள் பார்ப்பதில்லை. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை உட்கட்சி பிரச்சனையாகும், இதில் பாஜக தலையீடு எதுவும் கிடையாது" என்றார்.

இதையும் படிங்க: நீ என்ன எடப்பாடி ஆதரவாளரா? அதிமுக நிர்வாகி மீது தாக்குதல்.. ரத்தம் சொட்ட சொட்ட பேட்டி..

ABOUT THE AUTHOR

...view details