தமிழ்நாடு

tamil nadu

குமரி வரும் முதலமைச்சருக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு!

By

Published : Oct 12, 2020, 12:57 AM IST

கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் நாளை (அக்.13) நாகர்கோவிலுக்கு வருகை தருகிறார்.

Three tier security for Chief Minister coming to Kumari!
Three tier security for Chief Minister coming to Kumari!

கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள், மற்றும் கரோனா குறித்து ஆய்வு செய்வதற்காக நாளை (அக்.13) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வருகிறார். பயணிகள் விடுதியில் தங்கும் அவர், 14ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

அவரது வருகையை ஒட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்திரிநாத் தலைமையில் காவல் அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்திரிநாத் " தமிழ்நாடு முதலமைச்சரின் வருகையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில், மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணிகளில் சுமார் 1300 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஜல்லிக்கட்டு பயிற்சி: மாடு முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details