தமிழ்நாடு

tamil nadu

கன்னியாகுமரியில் ஆன்லைன் மோசடி கும்பலைச்சேர்ந்த 17 பேர் கைது

By

Published : Nov 3, 2022, 7:32 PM IST

ஒரு மடங்கு பணம் முதலீடு செய்தால் ஐந்து மடங்காக திருப்பித்தரப்படும் என சமூக வலைதளங்களில் விளம்பரம் கொடுத்து மக்களை ஏமாற்றி வந்த 17 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

கன்னியாகுமரியில் நேற்று (நவ.02) தனியார் விடுதி ஒன்றில் ஒருவர் ஒரே நேரத்தில் பத்து அறைகள் வாடகைக்கு எடுத்து ஒரு குழுவாக வந்து தங்கினார்கள். அவர்களைப் பார்க்க ஏராளமனோர் வருகை தந்து இருந்ததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் காவல் துறையினருக்குத்தகவல் தெரிவித்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்குச்சென்ற காவல் துறையினர், அவர்களது அறையை சோதனை செய்தபோது அவர்கள் மோசடிக்கும்பல் எனத்தெரியவந்தது. இதனையடுத்து, அங்கிருந்த சுந்தரபாண்டியன் (36) என்பவர் உள்பட 17 பேரை காவல் துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, சமூகவலைதளங்கள் மூலமாக விளம்பரம் செய்து, அதனைப் பார்த்து இவர்களைத்தொடர்பு கொள்ளும் நபர்கள் ஒருமடங்கு பணம் முதலீடு செய்தால் ஐந்து மடங்காக திருப்பித்தரப்படும் என்று மூளை சலவை செய்து, நம்ப வைத்து பணத்தை வாங்கி வாங்கி மோசடி செய்பவர்கள் எனத் தெரியவந்தது.

தொடர்ந்து, இந்த மோசடிக்காக பயன்படுத்தப்படும் மூன்று கார்கள், 11 லட்சம் ரூபாய் பணம், விண்ணப்ப படிவங்கள், ஆதார் அட்டைகள், ஸ்கேனர், பிரிண்டர், லேப்டாப், மொபைல் போன், கணினி, இ-சைன் போர்டு ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் கன்னியாகுமரியை முடித்துவிட்டு அடுத்த கட்டமாக சென்னையில் சென்று மோசடியை செயல்படுத்த திட்டமிட்டதாகவும், இதுவரை 70 ஆயிரம் பேர் ஏமாந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

ஆன்லைன் மோசடி கும்பல் கைது

இதையும் படிங்க:திருமணத்திற்கு மீறிய உறவை கண்டித்த மகன் கொலை... தாய் கைது...

ABOUT THE AUTHOR

...view details