தமிழ்நாடு

tamil nadu

'சைல்டு லைன்' மூலம் 315 குழந்தைகள் மீட்பு

By

Published : Nov 14, 2019, 7:07 AM IST

கன்னியாகுமரி: 'சைல்டு லைன்' (Child Line) அமைப்பு மூலம் 315 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அதன் திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

rescue-315-children-through-the-child-line-system

கன்னியாகுமரி மாவட்ட 'சைல்டு லைன்' திட்ட இயக்குனர் மைக்கேல்ராஜ் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

'குழந்தைகள் உதவி மையமான சைல்டு லைன் தொலைபேசி என் 1098-க்கு குமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மொத்தம் 1743 அழைப்புகள் வந்துள்ளன. இதில் 315 குழந்தைகளுக்கு பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட்டுள்ளது அதன்படி,

  • உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு உள்ளான 26 குழந்தைகள்,
  • குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட 19 குழந்தைகள்,
  • பிச்சையெடுக்க வைக்கப்பட்ட 48 குழந்தைகள்,
  • குழந்தைத் திருமணங்களிலிருந்து 6 குழந்தைகள்,
  • பாலியல் வன்முறையிலிருந்து 7 குழந்தைகள்,
  • கல்வி சம்பந்தமான உதவி கேட்ட 35 குழந்தைகள்,
  • பெற்றோருடன் சேர்த்து வைக்கப்பட்ட 18 குழந்தைகள்.

என்று பல்வேறு பிரச்சினைகளில் இருந்து 315 குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ''குழந்தைகளை கொண்டாடுவோம்'' என்ற தலைப்பில் சைல்டு லைன் நட்பு வாரம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பட்டிமன்றம், ஓவியப்போட்டி, மரம் நடும் நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.

சைல்டு லைன் திட்ட இயக்குனர் மைக்கேல்ராஜ்.

வடசேரி பஸ் நிலையத்தில் பாலியல் வன்முறையில் இருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறும்படம் வரும் 19ஆம் தேதி திரையிடப்படும். என்று அவர் கூறினார்.

இதையும் படிக்க: சென்னையில் ஸ்மார்ட் சிட்டி சாலைகளைத் திறந்து வைத்த முதலமைச்சர்!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் சைல்டு லைன் அமைப்பு மூலம் 315 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அதன் திட்ட இயக்குனர் மைக்கேல்ராஜ் தெரிவித்துள்ளார்.Body:குமரி மாவட்ட சைல்டு லைன் திட்ட இயக்குனர் மைக்கேல்ராஜ் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

குழந்தைகள் உதவி மையமான சைல்டு லைன் போன் நம்பரான 1098க்கு குமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மொத்தம் 1743 அழைப்புகள் வந்துள்ளன. இதில் 315 குழந்தைகளுக்கு பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு உள்ளான 26 குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட 19 குழந்தைகள், பிச்சையெடுக்க வைக்கப்பட்ட 48 குழந்தைகள், குழந்தைத் திருமணங்களிலிருந்து 6 குழந்தைகள், பாலியல் வன்முறையிலிருந்து 7 குழந்தைகள், கல்வி சம்பந்தமான உதவி கேட்ட 35 குழந்தைகள், பெற்றோருடன் சேர்த்து வைக்கப்பட்ட 18 குழந்தைகள் என்று பல்வேறு பிரச்சினைகளில் இருந்து 315 குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் வருகிற 14-ம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் சைல்டு லைன் நட்பு வாரம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பட்டிமன்றம், ஓவியப்போட்டி, மரம் நடும் நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.

வடசேரி பஸ் நிலையத்தில் பாலியல் வன்முறையில் இருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறும்படம் வரும் 19ஆம் தேதி திரையிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details