தமிழ்நாடு

tamil nadu

இரட்டை வேடம் போடும் திமுக: பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

By

Published : Oct 27, 2022, 5:30 PM IST

தமிழ்நாட்டில் திமுக இரட்டை வேடம் போட்டு வருவதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்
பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி: திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் தாய் மொழியாம் தமிழை கொண்டு வரவும், ஆட்சி மொழியில் தமிழை கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், திமுக அரசு மொழி அரசியல் செய்வதாக தமிழ்நாடு அரசை கண்டித்தும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்

பின்னர் செய்தியாளர்களிடம் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தும் இவர்கள் 1999 ஆம் ஆண்டு அன்றைய திமுக மத்திய அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் சென்று தனி வகுப்புகளில் இந்தி பாடம் படித்துக் கொண்டிருந்தார்கள். நானும் படிப்பதற்காக அங்கே சென்றபோது இவர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். வெளியில் சொல்லி விடாதீர்கள் என சொன்னார்கள்.

ஈழத்தில் கடைசி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது போரை நிறுத்த வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பா.சிதம்பரத்தின் உடைய வாக்குறுதிபடி போர் நிறுத்தப்பட்டது என்று கூறியதை கேட்டு உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டார்.

அவ்வாறு அவர் முடித்துக் கொண்டதால் ஏற்பட்ட விளைவு ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இது போன்ற ஒரு கொடுமை உலக சரித்திரத்தில் நடந்தது இல்லை. தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபட்சைக்கு திமுகவினர் டிஆர் பாலு, கனிமொழி மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்ததையும் நாம் மறுக்க முடியாது. இதுவும் திமுகவின் இரட்டை வேடத்தை காட்டுகிறது" என்றார்.

இதையும் படிங்க: அண்ணாமலையிடம் என்.ஐ.ஏ. விசாரணை நடத்த வேண்டும்; அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

ABOUT THE AUTHOR

...view details