தமிழ்நாடு

tamil nadu

குடும்பத் தகராறு ...உறவினரை வெட்டி கொலை செய்த இளைஞர்

By

Published : Nov 5, 2022, 9:58 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே குடும்ப தகராறு காரணமாக உறவினரை வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

கன்னியாகுமரி : சுசீந்திரம் கொத்தங்குளத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது அண்ணன் காஸ்டியன் என்பவர் உடன் ஏற்பட்ட நிலத்தகராறில் காஸ்டியன் மற்றும் அவரது மனைவியை அரிவாளால் வெட்டி உள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த இருவரும் உயிர் தப்பிய நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சுசீந்திரம் அருகே சுரேஷ் மற்றும் காஸ்டியன் மகனான அருண் ஜெனிஸ் என்பவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அருண் ஜெனிஸ் தனது சித்தப்பாவான சுரேசை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியுள்ளார்.

இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சுசீந்திரம் போலீசார் சுரேஷ் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அருண் ஜெனிஸை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : சென்னையில் கட்டடம் இடிந்து விழுந்து பெண் பலி: மருந்து வாங்க சென்ற போது நேர்ந்த சோகம்

ABOUT THE AUTHOR

...view details