தமிழ்நாடு

tamil nadu

ஆடி அமாவாசையை முன்னிட்டு குமரியில் குவிந்த மக்கள்

By

Published : Jul 17, 2023, 11:10 PM IST

ஆடி அமாவாசையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை தாமிரபரணி ஆறு, திற்பரப்பு அருவி உட்பட பிரதான நீர் நிலைகளில் மக்கள் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

ஆடி அமாவாசையை முன்னிட்டு குமரியில் குவிந்த மக்கள்

கன்னியாகுமரி: தமிழகத்தில் ஆடி மாதத்தை ஆன்மிக மாதமா கடைப்பிடித்து வருவது வழக்கம். இந்த மாதம் முழுவதுமே அம்மன் வழிபாடு அனைத்து கோவில்களிலும் நடைபெரும் ஆடித் தபசு, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடி கிருத்திகை என பல விழாக்கள் உள்ளன இப்படி புனிதமான மாதமாக கருதப்படும் இந்த ஆடி மாதத்தில் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் மட்டும் நடைபெருவது இல்லை.

சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆடிமாதம் பொதுவாகவே சூரியனும் சந்திரனும் இணையும்
நாள் அமாவாசை என்றும், சூரியன் ஒரு மாதம் முழுவதும் சந்திரனின் வீட்டிலேயே சஞ்சாரம் செய்வதால் அது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது என ஆன்மிக ஆர்வலற்கள் கூறுகின்றனர்.

மேலும், சூரியன் ஒரு மாதம் முழுவதும் சந்திரனின் வீட்டிலேயே சஞ்சாரம் செய்கிறார் என்பதால் அது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆகையால், இந்த ஆடி மாதம் முழுவதுமே இறை வழிபாட்டிற்கும் பித்ருக்கள் வழிபாட்டுக்கும் உரிய மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்றும் ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர்.

குறிப்பாக, பித்ரு வழிபாட்டிற்கு உரிய நாளாக ஆடி அமாவாசை இந்த மாதத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு ஆண்டில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினம் வந்தாலும் ஆடி மாதம் வரும் அமாவாசை மிக முக்கியமானவை முன்னோர்கள் வழிபாடு செய்ய உகந்த நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு, ஆடி அமாவாசை தினம் இரண்டு அமாவாசை தினங்களாக வருகின்றன. அதாவது ஆடி மாதத்தில் முதல் நாள் ஆடி 1 ம் தேதி (ஜூலை - 17) அன்றும் ஆடி 31-ம் தேதி (ஆகஸ்ட் -16) அன்றும் அமாவாசை தினமாக வருகின்றன. இந்த மாதத்தில் செய்யும் பித்ரு வழிபாடுகள், ஏழைகளுக்கு வழங்கும் தான தர்மங்கள் ஆகியன மிகுந்த பலன்களை கொடுக்கும் என கூறப்படுகிறது.

இப்படி சிறப்பு வாய்ந்த ஆடி அமாவாசையான இன்று தர்ப்பணம் செய்து பலிகர்மத்தில் ஈடுபட்டால் இறந்த மூதாதையர்களின் ஆன்மா சாந்தி பெறும். குடும்பமும் சந்ததியினரும் விருத்தி அடைவார்கள் என்ற நம்பிக்கையை இந்துக்களிடையே உள்ளது. இதன் அடிப்படையில் முதல் அமாவாசையான இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை, தாமிரபரணி ஆறு மற்றும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி உட்பட பல்வேறு நீர் நிலைகளில் ஆயிரக்கணக்கானோர் மறைந்த முன்னோர்களுக்கு தற்ப்பணம் செய்தனர்.

தங்கள் முன்னோர்களை நினைத்து ஆண்டு தோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய இரு நாட்களில் புனித நீர் நிலைகளுக்கு சென்று அரிசி, தர்ப்பை, எள், உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு தர்ப்பணம் கொடுத்து பூஜைகள் செய்து புனித நீராடுவது நம் பாரம்பரிய முறைகளில் ஓன்று. இந்த ஆண்டு ஆடி அமாவாசை இரண்டு வருவதால் கேரளா பஞ்சாங்க முறைபடி குழித்துறை தாமிரபரணி ஆற்றில் மக்கள் பலி தர்பணம் செய்தனர்.

இதையும் படிங்க:ஆஞ்சநேயருக்கு 121 கிலோ காய்கறியில் அலங்காரம் - பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட தக்காளிகள்!

ABOUT THE AUTHOR

...view details