தமிழ்நாடு

tamil nadu

சவூதிக்கு வேலைக்குச்சென்று உணவின்றித்தவிக்கும் நபர் - மீட்டு தரக்கோரி தாய் கண்ணீர் மல்க கோரிக்கை

By

Published : Oct 20, 2022, 12:32 PM IST

சவூதி அரேபியாவிற்கு வேலைக்குச்சென்ற மகன் கொடுமைக்கு உள்ளாவதால், அவரை மீட்டுத்தரக்கோரி அவரது தாய் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.

சவுதி அரேபியாவிற்கு வேலைக்குச் சென்ற மகனை மீட்டு தரக் கோரி தாய் கண்ணீர் மல்க கோரிக்கை
சவுதி அரேபியாவிற்கு வேலைக்குச் சென்ற மகனை மீட்டு தரக் கோரி தாய் கண்ணீர் மல்க கோரிக்கை

கன்னியாகுமரி: நாகர்கோவில் அடுத்த ஆசாரிப்பள்ளம் வசந்தம் நகரைச் சேர்ந்தவர், சரஸ்வதி (65). இவர் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரைச்சந்தித்து ஏற்கெனவே கோரிக்கை மனு கொடுத்திருந்த நிலையில், மீண்டும் குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் மனு அளித்தார்.

இவ்வாறு சரஸ்வதி அளித்துள்ள மனுவில், “எனது மகன் தினேஷ்குமார் கடந்த செப்டம்பர் 2021ஆம் ஆண்டு சவூதி அரேபியாவிற்கு, விழுந்தயம்பலம் பகுதியைச்சேர்ந்த ரத்தினசாமி என்ற ஏஜென்ட் மூலம் டிரைவர் வேலைக்குச் சென்றார். இதற்காக, எனது மகன் இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து சென்றான்.

ஆனால் வேலைக்குச்சென்ற இடத்தில் அவருக்கு வேலை செய்த மூன்று மாத சம்பளமும் கொடுக்காமல் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துவிட்டு; உணவும் கொடுக்காமல் தனி அறையில் அடைத்து வைத்து, அடித்து உதைத்து சித்ரவதை செய்வதாக எனக்கு வேறொரு நபர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து எனது மகனை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. எனது மகன் எந்த நிலையில் இருக்கிறார் என்பது எனக்குத்தெரியவில்லை. ஏஜென்டிடம் கேட்டால் அவர்கள் பேசுகிறோம் என சொல்வதைத் தவிர எந்த பதிலும் தரவில்லை. எனது மகன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கருணை கூர்ந்து என் மகனை மீட்டு இந்தியா கொண்டு வர வேண்டும். அவன் மனைவி மற்றும் குழந்தைகள் பெரிதும் கஷ்டப்படுகின்றனர்” என‌த் தெரிவித்துள்ளார்.

தினேஷ்குமாரின் மனைவி கெர்வின் மேரி பேட்டி

மேலும் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதியில் இருந்து ஒரு மாதமாக அறையில் இருந்து வரும் தினேஷுக்கு சாப்பாடு ஒன்றும் கிடைப்பதில்லை எனவும், எப்போதாவதுதான் அவருக்கு உணவு கிடைக்கிறது என்றும், நண்பர்கள் வந்தால்தான் தினேஷால் சாப்பிட முடிகிறது எனவும் அவரது தாயார் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:இளைஞர்களே உஷார்:வெளிநாட்டு வேலை மோகம்..ஏமாற்றும் கும்பல் ஏராளம் - டிஜிபி அட்வைஸ்

ABOUT THE AUTHOR

...view details