தமிழ்நாடு

tamil nadu

மெடிக்கல் ஸ்டுடன்ட் டூ மிஸ் சவுத் இந்தியா - மகுடம் சூடிய நாகர்கோவில் பெண்

By

Published : Dec 21, 2022, 5:58 PM IST

ராஜஸ்தானில் நடைபெற்ற அழகிப் போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற நாகர்கோவிலை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி, தென்னிந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மெடிக்கல் ஸ்டூடண்ட் டூ மிஸ் சவுத் இந்தியா
மெடிக்கல் ஸ்டூடண்ட் டூ மிஸ் சவுத் இந்தியா

மெடிக்கல் ஸ்டுடன்ட் டூ மிஸ் சவுத் இந்தியா

கன்னியாகுமரி:நாகர்கோவில் கார்மல் நகர் பகுதியைச் சேர்ந்தவர், நிஷோஜா. மருத்துவக் கல்லூரி மாணவியான இவர், தனது சிறு வயது முதலில் இருந்தே தனித்திறன் வளர்ப்பு, அழகிப் போட்டி உள்ளிட்டப் பல்வேறு வகையில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். குறிப்பாக, அழகிப் போட்டிகளில் அதிக ஈடுபாடுடன் இருந்துள்ளார்.

அவர் முதன்முதலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அழகிப் போட்டியில் கலந்துகொண்டு, மிஸ் கன்னியாகுமரி என்ற பட்டத்தைப் பெற்றார். அதன் பின்னர் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு மிஸ் தமிழ்நாடு ரன்னர் என்ற பட்டத்தையும் பெற்றார்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் டிசம்பர் 19-ம் தேதி நடைபெற்ற தேசிய அளவிலான மிஸ் அழகிப் போட்டியில் கலந்து கொண்டார். இப்போட்டியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும், மாநிலத்திற்கு ஒருவர் என்ற அடிப்படையில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தப் போட்டியில் தென்னிந்திய அழகியாக மாணவி நிஷோஜா தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்று பதக்கங்களுடன் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலுக்கு இன்று வந்த அவரை உறவினர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

போட்டியில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட திறமைகளை வெளிப்படுத்துதல், கேட்கும் கேள்விகளுக்கு வேகமாகப் பதில் அளிப்பது, நடை, உடை, பாவனை என்ற அடிப்படையில் போட்டி நடைபெற்றதாக தென்னிந்திய மிஸ் அழகியாக தேர்வு பெற்று வந்த மருத்துவ கல்லூரி மாணவி நிஷோஜா செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஹாக்கி உலகக் கோப்பை பயணம்; முதலமைச்சர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற வீரர்கள்!

ABOUT THE AUTHOR

...view details