தமிழ்நாடு

tamil nadu

ஒடிசா ரயில் விபத்து குறித்து அவதூறு; கன்னியாகுமரியில் பாஜக உறுப்பினர் கைது

By

Published : Jun 8, 2023, 11:09 PM IST

Updated : Jun 9, 2023, 3:02 PM IST

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக, அவதூறு பரப்பிய பாஜகவைச் சேர்ந்தவர் ஒருவரை கன்னியாகுமரியில் போலீசார் கைது செய்தனர்.

BJP Supporter arrested
பா.ஜ.க ஆதரவாளர் கைது

கன்னியாகுமரி:ஒடிசா ரயில் விபத்து சம்பந்தமாக அங்குப் பணிபுரியும் இஸ்லாமியர் ஒருவரை விசாரிக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்ட கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க ஆதரவாளரான வழக்கறிஞர் செந்தில்குமார் என்பவரை தக்கலை போலீஸார் இன்று (ஜூன் 8) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தக்கலை காவல் நிலைய எல்லையில் பருத்திவிளை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில்குமார் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து சம்பந்தமாக விசாரணை நடத்தும் படி ஒரு கருத்தைப் பதிவிட்டு உள்ளார். ஏற்கனவே விபத்து நடந்த இடத்தில் ஒரு மசூதி இருந்ததாக புரளி பரவி வந்த நிலையில் செந்தில்குமாரின் இந்த ட்விட்டர் பதிவு இன்னும் சர்சையை பரப்பியுள்ளது.

அதில் அவர் ”இதுவரை ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து 300-க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றிருக்கிறது. 900-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து இருக்கின்றனர். விபத்து நடந்த ரயில் நிலையத்தின் பெயர் பஹாநாகா. இந்த ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் பெயர் முகமது ஷெரீப் அகமது. விபத்து குறித்து விசாரிக்க..” எனக் குறிப்பிட்டதுடன், ஸ்டேஷன் மாஸ்டர் புகைப்படம் ஒன்றையும் பதிவுசெய்திருந்தார். பின்னர், தான் போட்ட இந்தப் பதிவு தவறானது என்றும், யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளவும் எனவும் பதிவிட்டிருந்தார்.

இவ்வாறு மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செந்தில்குமார் பதிவிட்டதாக தி.மு க உறுப்பினரான தினேஷ்குமார் என்பவர் நேற்று (07.06.2023) போலீஸில் புகார் அளித்தார். அந்தப் புகாரின்பேரில், தக்கலை போலீஸார் குற்ற எண் 238/2023 U/S. 153, 153A (1)(a), 505 (1)(b), 505 (2) IPC உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்தனர். மேலும், பா.ஜ.க ஆதரவாளரான செந்தில்குமாரை தக்கலை போலீஸார் கைதுசெய்து, இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடெங்கும் சோகத்தை ஏற்படுத்தியஒடிசா ரயில் விபத்து, கடந்த மே 2ஆம் தேதி நடந்த நிலையில், இதில் 288 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், 900-க்கும் மேற்பட்டோர் இந்த பயங்கரமான விபத்தில் காயமடைந்தனர். இந்தக் கோர விபத்து குறித்து சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நாடே அஞ்சலி செலுத்தி வருகிறது. இந்த விபத்துக்கான முழு காரணத்தையும் கண்டறிய விசாரணை நடந்துவரும் வேளையில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை பரப்ப வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: "நான் எப்படி உயிரோடு இருக்கேன்னு தெரியல" - ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய சென்னை தரணி கூறிய தகவல்!

Last Updated : Jun 9, 2023, 3:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details