தமிழ்நாடு

tamil nadu

கருத்து வேறுபாடு காரணமாக காதல் மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்த கணவன்  போலீசாரிடம் சரண்

By

Published : Oct 22, 2022, 10:26 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கருத்து வேறுபாடு காரணமாக காதல் மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்த கணவன் காவல்துறையில் சரண்...!
காதல் மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்த கணவன் காவல்துறையில் சரண்...!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி வெனிஸ்டர்(32). இவர் வீடுகளில் அழகு சாதன மரவேலைப்பாடுகளை செய்துகொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பத்மா(30). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. 8 மற்றும் 10 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனிடையே கடந்த 3 மாதமாக இருவரும் ஒரே வீட்டில் குழந்தைகளை கவனித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இன்று (அக்.22) ஆண்டனி வெனிஸ்டர் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது பத்மா செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பத்மாவை ஆண்டனி வெனிஸ்டர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன்பின் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இதுகுறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர். பத்மாவின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஆண்டனி வெனிஸ்டர் வடசேரி காவல்நிலையத்தில் தானாக வந்து சரணடைந்தார்.

இதையும் படிங்க:காதலிக்க வற்புறுத்தி பெண் தீ வைத்து கொலை..!

ABOUT THE AUTHOR

...view details