தமிழ்நாடு

tamil nadu

திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு...சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

By

Published : Sep 7, 2022, 12:30 PM IST

குமரி மாவட்டம் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது

s
Etv Bharat

கன்னியாகுமாரி: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. அதன் அண்டை மாவட்டமான கன்னியாகுமரியின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது.

இதனால் முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பறை அணையின் நீர்மட்டம் 45.45 அடியாக உள்ளது. வினாடிக்கு 1470 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 281 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதே போன்று 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72 .77 அடியாகவும் உயர்ந்துள்ளது. அனைக்கு வினாடிக்கு 922 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையில் இருந்து வினாடிக்கு 420 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அனைத்து முக்கிய அணைகளில் இருந்து வினாடிக்கு உபரி நீர் 2114 கண்ணாடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குழித்துறை, தாமிரபரணி ஆறு உள்ளிட்ட முக்கிய ஆறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

அணையில் இருந்து உபரி நீர் திறப்பு காரணமாக முக்கிய சுற்றுலா மையமான திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை

ABOUT THE AUTHOR

...view details