தமிழ்நாடு

tamil nadu

குமரியில் தொடரும் கனமழையால் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு

By

Published : May 15, 2021, 6:36 PM IST

கன்னியாகுமரி : அரபிக்கடலில் உருவாகியுள்ள டாக்டே புயலின் காரணமாக பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றின் கரையோரம், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குமரியில் தொடரும் கனமழையால் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு
குமரியில் தொடரும் கனமழையால் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபிக்கடலில் உருவாகியுள்ள ’டாக்டே’ புயலின் காரணமாக கடந்த இரண்டு நாள்களாக பரவலாக பெய்து வருகிறது. நேற்று (மே.14) இரவு பெய்த கனமழையின் காரணமாக கோழிப்போர்விளை பகுதியில் அதிகபட்சமாக 92 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தக்கலை, முள்ளங்கினாவிளை பகுதிகளில் 87 மில்லி மீட்டரும், பெருஞ்சாணி அணை பகுதியில் 81.8 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

கனமழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1,532 கன அடி வேகத்தில் நீர் வந்து கொண்டிருக்கிறது. அதிகமான நீர்வரத்தின் காரணமாக விநாடிக்கு 175 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 48 அடியில், தற்போது 43.01 அடி நீர்மட்டம் உள்ளது. பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 57.80 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 1,510 கன அடி வேகத்தில் நீர்வரத்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

சிற்றாறு ஒன்றாவது அணையில் 9.97 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 383 கன அடி வேகத்தில் நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு இரண்டாவது அணையில் 10.07 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 594 கன அடி வேகத்தில் நீர்வரத்து வருகிறது.

தொடரும் கனமழையால் வாய்கால்கள், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது. குழித்துறை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அமலுக்கு வந்த வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை - மாற்றமா? ஏமாற்றமா?

ABOUT THE AUTHOR

...view details