தமிழ்நாடு

tamil nadu

குமரியில் இரண்டு நாட்களாக தொடரும் கனமழை

By

Published : Sep 2, 2019, 10:32 PM IST

கன்னியாகுமரி: இரண்டு நாட்களாக குமரியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

continuous-rains

கன்னியாகுமரியில் நேற்று இரவு தொடங்கிய கனமழை, இன்று காலை வரையிலும் நீடித்ததால் நகரின் முக்கிய இடங்களில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்குச் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக குமரியில் இடியுடன் கூடிய கனமழை

அதிகபட்சமாக, மயிலாடியில் 80 மி.மீ மழை பெய்துள்ளது. அதேபோல் குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு போன்ற அணை பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளதால், அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details