தமிழ்நாடு

tamil nadu

குமரியில் கொண்டாடப்பட்ட சோனியா காந்தி பிறந்த நாள் விழா!

By

Published : Dec 9, 2020, 1:09 PM IST

கன்னியாகுமரி: மாவட்ட காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமரியில் கொண்டாடப்பட்ட சோனியா காந்தி பிறந்த நாள் விழா!
குமரியில் கொண்டாடப்பட்ட சோனியா காந்தி பிறந்த நாள் விழா!

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று (டிச. 9) நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ராஜிவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் இனிப்பு வழங்கி, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர். ராதாகிருஷ்ணன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடத்தியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிவருகின்றனர்.

இதையும் படிங்க...சோனியா காந்தி பிறந்த நாள்: தங்கத் தேர் இழுத்து நாராயணசாமி வழிபாடு

ABOUT THE AUTHOR

...view details