தமிழ்நாடு

tamil nadu

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த சத்தீஸ்கர் முதலமைச்சர்!

By

Published : Nov 23, 2020, 2:03 PM IST

Updated : Nov 23, 2020, 2:16 PM IST

கன்னியாகுமரி: இரண்டு நாள் பயணமாக கன்னியாகுமரி வந்த சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் இன்று பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.

சத்தீஸ்கர் முதலமைச்சர்
சத்தீஸ்கர் முதலமைச்சர்

சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் கன்னியாகுமரியை சுற்றி பார்ப்பதற்காக நேற்று (நவம்பர்22) கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து கார் மூலம் வந்தார்.

இதனையடுத்து மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அரவிந்த், எஸ்பி (பொறுப்பு) மணிவண்ணன் ஆகியோர் பூங்கொத்து அளித்து வரவேற்றனர்.

இரவு கன்னியாகுமரியில் தங்கிய அவர் இன்று (நவ.23) காலை சூரிய உதயத்தைப் பார்வையிட சென்றார். ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரியன் கடலில் இருந்து வெளி வருவது தெரியவில்லை.

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த சத்தீஸ்கர் முதலமைச்சர்

இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலை நனைத்துவிட்டு, பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். இன்று கார் மூலம் திருவனந்தபுரம் செல்லும் அவர், விமானம் மூலம் சத்தீஸ்கர் திரும்புகிறார்.

இதையும் படிங்க: பாஜகவின் வேல்யாத்திரை 'வேல்' க்கு நோ சொன்ன மருதமலை கோயில் நிர்வாகம்

Last Updated : Nov 23, 2020, 2:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details