தமிழ்நாடு

tamil nadu

நாகர்கோவில் டூ நாசா: கல்லூரி மாணவிக்கு குவியும் பாராட்டு

By

Published : Mar 14, 2020, 5:36 PM IST

கன்னியாகுமரி: நாகர்கோவிலுள்ள கல்லூரி மாணவி சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியில் வெற்றிபெற்று நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்குச் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

barhana
barhana

உலகளவில் இயங்கி வரும் கோ 4 குரு என்ற இணையதள அமைப்பு சர்வதேச அளவில் ஆண்டு தோறும் அறிவியல் திறமை, பொதுஅறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் போட்டிகளை ஆன்லைன் மூலம் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்காக நடத்தி வருகிறது.

இதில் விண்வெளி அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை நாசா அழைத்துச் சென்று அவர்களுக்கு உரிய உயர்தரப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அத்துடன் விண்வெளி துறைகளில் வேலைவாய்ப்புகளையும் நாசா நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் நடைபெற்ற சர்வதேச விண்வெளி அறிவியல் தொடர்பான போட்டியில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

நாசா செல்லும் கல்லூரி மாணவி பர்ஹானா

இதில், குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள தனியார் கல்லூரி மாணவி பர்ஹானா வெற்றிபெற்று நாசா விண்வெளி மையத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குளச்சலைச் சேர்ந்த இந்த மாணவி தற்போது நாகர்கோவில் அருகே சுங்கான்கடை புனித சேவியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் கல்வி படித்து வருகிறார். நாசாவால் தேர்வு செய்யபட்ட மாணவி பர்ஹானாவிற்கு கல்லூரி ஆசிரியர்கள், சக மாணவியர்கள் ஆகியோர் பாராட்டுகள் தெரிவித்தனர்.

மாணவி ஜூன் மாதம் அமெரிக்காவின் நாசாவிற்குச் செல்லவுள்ளார். இதன் மூலம், குமரி மாவட்டத்திலிருந்து நாசா விண்வெளி மையத்தால் தேர்வு செய்யப்பட்ட முதல் மாணவி என்ற சாதனையையும் பர்ஹானா பெற்றுள்ளார்.

இதையும் படிங்க:சுமார் ரூ.7,700 கோடி செலவில் 780 கி.மீ. பசுமை சாலை!

ABOUT THE AUTHOR

...view details