தமிழ்நாடு

tamil nadu

பணி வழங்காமல் இழுத்தடிப்பு; கண்ணீருடன் பாட்டுப்பாடி குமரி கலெக்டர் ஆபீஸில் மாற்றுத்திறனாளி தர்ணா

By

Published : Feb 1, 2023, 7:00 PM IST

அரசு மருத்துவக்கல்லூரியில் பணி செய்யவிடமாலும் வீட்டின் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு ஆகியவற்றை துண்டித்த விட்டதாகக் கூறி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் கண்ணீருடன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

பணி வழங்காமல் இழுத்தடிப்பு
பணி வழங்காமல் இழுத்தடிப்பு

பணி வழங்காமல் இழுத்தடிப்பு; கண்ணீருடன் குமரி கலெக்டர் ஆபீஸில் மாற்றுத்திறனாளி தர்ணா

கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லிஃப்ட் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்த மாற்றுத்திறனாளி கணேசன். இவருக்கு பணி வழங்காமல் புறக்கணித்ததோடு மருத்துவமனை வளாகத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுக்கும் குடிநீர் இணைப்பையும் மின் இணைப்பையும் அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகம் துண்டித்ததால் இன்று (பிப்.1) நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து தஞ்சம் அடைந்து பாட்டு பாடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லிஃப்ட் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்தவர் கணேசன். மாற்றுத்திறனாளியான இவர் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் லிஃப்டில் சென்று வரும்போது, அதனுள் லிஃப்ட் ஆப்ரேட்டராக கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு பணி வழங்காமல் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் புறக்கணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அத்தோடு, மருத்துவமனை வளாகத்திற்குள் இவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டின் மின் இணைப்பையும் குடிநீர் இணைப்பையும் துண்டித்து விட்டதாகத் தெரியவருகிறது.

இதனால், மனமுடைந்த மாற்றுத்திறனாளியான கணேசன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தன்னிடம் உள்ள ஆவணங்கள் அனைத்துடனும் கண்ணீர் மல்க, பாட்டுப்பாடி தர்ணாவில் ஈடுபட்டார். மேலும், அவர் தனக்கு நீதிமன்றத்தின் ஆணைப்படி, தனது பணியைத் திரும்ப வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு, தனது வீட்டிற்கு இருந்த மின் இணைப்பை துண்டித்ததால் தான், வேறு வழியில்லாமல் தனது பணம் ரூ.2500-யை செலவு செய்து மீண்டும் மின் இணைப்புக்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறினார்.

தான் செய்து வந்த லிஃப்ட் ஆப்ரேட்டர் வேலையைக் கொண்டே, தனது அன்றாட வாழ்வாதாரத்தை ஈட்டி வந்ததாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார். தற்போது, மருத்துவக்கல்லூரி நிர்வாகம் தன்னை பணிக்கு அனுமதிக்காமலும் செய்த பணிக்கு ஊதியம் வழங்காமலும் உள்ளதால் மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் கண்ணீருடன் பாட்டுப் பாடியபடி, தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: நடிகை காயத்ரி ரகுராமை ஆபாசமாக சித்தரித்த பாஜக பிரமுகர்கள் மீது சைபர் கிரைம் வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details