தமிழ்நாடு

tamil nadu

‘அதிமுக சுதந்திரமாக செயல்பட்ட காலம் ஜெயலலிதாவுடன் முடிந்துவிட்டது’ - முத்தரசன்

By

Published : Jun 12, 2019, 9:13 PM IST

கன்னியாகுமரி: அதிமுக சுதந்திரமாக செயல்பட்ட காலம் ஜெயலலிதாவுடன் முடிந்துவிட்டது என்றும், தமிழ்நாட்டில் அதிமுகவை வழி நடத்துவதே பாஜகதான் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

முத்தரசன் பேட்டி

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அன்பு வனத்தில் உள்ள அய்யா வைகுணடசாமி இல்லத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பார்வையிட்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சாதி, மத பேதமில்லாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று பாடுபட்டவர் அய்யா வைகுண்டசாமி.

தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி தனது சொந்த பலத்தை தார்மீக ரீதியாக இழந்துவிட்டது. அதை மெய்ப்பிக்கும் வகையில் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தோல்வியைத் தழுவியது. மாநிலத்தில் எப்படி பாஜகவை மக்கள் நிராகரித்தார்களோ அதேபோல் அதிமுகவையும் நிராகரித்துவிட்டார்கள். அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்னை, உட்கட்சி பிரச்னை. அதை அவர்களே தீர்க்க வேண்டும்.

முத்தரசன் பேட்டி

அதேபோல், அதிமுக சுதந்திரமாக செயல்பட்ட காலம் ஜெயலலிதாவுடன் முடிந்துவிட்டது. தற்போது தமிழ்நாட்டில் அதிமுகவை வழிநடத்துவதே பாஜகதான். அதிமுக என்ற வாழைமரம் காற்றில் விழுந்து விடாமல் இருக்க மோடி தான் முட்டுக்கொடுத்துள்ளார். அவர் மட்டும் முட்டு கொடுப்பதை எடுத்தால் வாழைமரம் சாய்வது போல அதிமுக சாய்ந்துவிடும்” என்றார்.

Intro:அதிமுக சுதந்திரமாக செயல்பட்ட காலம் ஜெயலலிதாவுடன் முடிந்துவிட்டது. அதிமுகவை தமிழ்நாட்டில் வழி நடத்துவதே பாஜகதான். தமிழகத்தில் இந்த அரசு நீடிப்பதும் நீடிக்காமல் போவதும் மோடியிடம் உள்ளது. அதிமுக வாழைமரம் போன்று காற்றில் கீழே விழுந்துவிடாமல் பிரதமர் மோடி முட்டுக் கொடுத்து உள்ளார். அவர் முட்டு கொடுப்பதை எடுத்தால் வாழைமரம் சாய்வது போல அதிமுக சாய்ந்துவிடும் சாமிதோப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேட்டி.


Body:அதிமுக சுதந்திரமாக செயல்பட்ட காலம் ஜெயலலிதாவுடன் முடிந்துவிட்டது. அதிமுகவை தமிழ்நாட்டில் வழி நடத்துவதே பாஜகதான். தமிழகத்தில் இந்த அரசு நீடிப்பதும் நீடிக்காமல் போவதும் மோடியிடம் உள்ளது. அதிமுக வாழைமரம் போன்று காற்றில் கீழே விழுந்துவிடாமல் பிரதமர் மோடி முட்டுக் கொடுத்து உள்ளார். அவர் முட்டு கொடுப்பதை எடுத்தால் வாழைமரம் சாய்வது போல அதிமுக சாய்ந்துவிடும் சாமிதோப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேட்டி.


அதிமுக சுதந்திரமாக செயல்பட்ட காலம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் முடிந்துவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
சாமிதோப்பு அன்பு வனத்திற்கு வந்த அவரை சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார் வரவேற்றார் .பின்னர் அய்யா வாழ்ந்த இல்லம் மாதிரியை பார்வையிட்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஜாதி மத பேதம் இல்லாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென என்று பாடுபட்டவர் அய்யா வைகுண்டசாமி என்பது அனைவருக்கும் தெரியும் .தமிழகத்தில் நடக்கும் ஆட்சி தனது சொந்த பலத்தை தார்மீக ரீதியாக இழந்துவிட்டது. அதை மெய்ப்பிக்கும் வகையில் நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது .சட்டமன்ற இடைத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது தமிழ்நாட்டில் பாஜக வை எப்படி நிராகரித்தார்கள் அதேபோல் அதிமுகவையும் நிராகரித்துவிட்டார்கள். உண்மையில் அவர்கள் ஆட்சியில் தொடர தார்மீக உரிமை கிடையாது. அதிமுகவில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினை உட்கட்சி பிரச்சினை அதை அவர்களே தீர்வு காண வேண்டும். ஆனால் அதைத் தீர்ப்பது போன்று பாசாங்கு செய்து நடிப்பது பாஜக.
இன்று அதிமுகவை வழி நடத்துவதே பாஜகதான் பாஜகவின் ஆலோசனையை கேட்டு தான் அதிமுக செயல்படுகிறது. அதனால்தான் பாஜக எத்தனை துரோகம் செய்தாலும் அதை ஏற்றுக் கொண்டு செயல்படும் கட்சியாக அதிமுக மாறிவிட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 2021 வரை முதல்வராக நீடிக்க வேண்டும் அந்த ஒற்றை குறிக்கோளை தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்படாத அரசாங்கமாக உள்ளது .பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாத நிலையில் அதிமுக வை பினாமி கட்சியாக பயன்படுத்தி வருகிறது. தமிழகத்தில் நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக காவிரி நதிநீர் பிரச்சனை ஹைட்ரோ கார்பன் திட்டம் புயல் பாதிப்பு போன்றவைகளில் தமிழகத்தின் மீது எந்த அக்கறையும் காட்டவில்லை .தமிழ்நாடு கேட்ட நிதியையும் வழங்கவில்லை .தமிழ்நாட்டு மக்களுக்கு வஞ்சிக்கும் போக்கு தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது உரிமைகளை நிலைநாட்ட கூடிய அரசு தமிழ்நாட்டில் ஏற்படும் வரையிலும் இதை நாம் எதிர்கொள்ள வேண்டும் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மனுதர்மத்தை புகுத்துவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது இதனை முறியடிக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்கவில்லை .இந்தக் கொள்கைகளை வெளியிட்ட 30 நாட்களுக்குள் கருத்து சொல்ல கேட்டுள்ளது ஆனால் இதற்கு மேலும் கலர் கால அவகாசம் வேண்டும் முகநூல் போன்ற சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ள பயன்படுத்த வேண்டும் அதிமுகவில் தினகரன் இபிஎஸ் ஓபிஎஸ் ஆகிய 3 பேருக்கும் நடப்பது கொள்கை பிரச்சினை இல்லை அது அதிகார பிரச்சினை அதிகாரப் போட்டி வேறு ஒன்றும் இல்லை அதிமுக சுதந்திரமாக செயல்பட்டது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காலத்தோடு முடிந்து போய்விட்டது இந்த அரசு நீடிப்பதும் கிடைக்காமல் போவது மோடியிடம் தான் உள்ளது அதிமுக வாழைமரம் அது காற்றில் கீழே விழுந்துவிடாமல் பிரதமர் மோடி முட்டுக் கொடுத்து உள்ளார் அவர் மட்டும் கொடுப்பதை எடுத்தால் வாழைமரம் சாய்வது போல அதிமுக சாய்ந்துவிடும் இவ்வாறு அவர் கூறினார்.


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details